172. அழுகையும்பு லம்பலுமே யுங்களுக்கோ ஆனந்தந் தானுளதே யிப்புவிக்கே அழுகைமிகத் துக்கமுமே யுண்டெனினும் மாறுமதே யின்பமாக வுங்களுக்கே அழுகிறாளோ பேறுகால மேவரவே அச்சமையம் வேதனையோ மாகொடிதே அழுவதுண்டோ ஓர்மகன்செ னித்தபோதில் ஆனந்தமேயோர்மகன்செ னித்தனென 173. இப்பொழுதோ துக்கமடைந் தீர்மிகவே யின்னுமே திரும்பியுமைக் காணுவேனே அப்பொழுதோ உங்களுட உள்ளமோதா னானந்தத் தானிறைந்தே வாழுவீரே எப்பொழுது மும்முடசந் தோடத்தை யாருமேயெ டுத்துவிடக் கூடிகதில் எப்பொழுது மத்தினத்தி லென்னிடமே யேதையுமே சேட்பதில்லை நிச்சயமே. 174. நீங்களேய றிந்துகொள்ளத் திட்டமாயே மெய்மெயாயு ரைக்கிறேனே யுங்களுக்கே. நீங்களென்பி தாவிடமென் னாமமதாற் கேட்பதேதும் நிச்சயமாய்த் தந்தருள்வார் நீங்களிது நாள்வரையென் னாமமதால் நேரிலேதுங் கட்டதில்லை தந்தையிடம் நீங்களோஇப் போதுகேண்மின் நிச்சயமாய் நீர்பெறுவீர் பூர்த்தியுற வுங்களிப்பே 175. உவமைகளி னாலிையெ யும்மிடமே பேசுகிறேன் இப்பொழுதில் நாள்வருமே உவமைகளா லேயதுநா ளும்மொடுமே யொன்றையுமே பேசுவதில் லைமறைவாய் எவையுமே வெளிப்படையா பும்மொடுமே யென்பிதாவைப் பற்றியறி விப்பேனே 176. நீங்கள்பெற வேபிதாவை வேண்டுவேனே ன்றுங்களுக்கு யானுரைக்க வேண்டியதில் நீங்களென்னை நேசித்தே யானெனது நேசபிதா விடமிருந்தே வந்தேனென நீங்கள்விசு வாசமுளோ ரானதினால் உங்களைநே சிக்கிறாரென் தந்தையர்தாம் ஈங்குவந்தேன் தந்தையிட மேயிருந்தே யிங்கிருந்தே செல்லுகிறேன் தந்தையிடம். |