பக்கம் எண் :

திரு அவதாரம்313

 

177.       இப்படியே யேசுபரன் சீடருக்கி சைக்கவுமே சீடருமே யேசுவிடம்
              இப்பொழுதோ நீருவமை யாயெமிடம் பேசாதி சைக்கிறீர்வெ ளிப்படையாய்
              எப்பொழுதும் யாவுமேய றிந்தவரே எவருமேவி னாவவுமை வேண்டியதில்
              இப்பொழுத றிந்துவிசுவா சிக்கிறேமே வானுலகி னின்றுமேவந்தீரெனவே.

178.       யேசுவோவு ரைற்தனர்மா றுத்தரவே யிப்பொழுதோ என்னைவிசுவா சிக்கின்றீர்
              நேசமுளோர் நீவிரோடு வீர்சிதறி நீர்நினையீர் விட்டெனைத்தன் தன்னிடமே
              யோசனையொன் றுஞ்செயாதென் னைத்தனியே யுத்தியிலா ராகவிட்டே யோடுவீரே.

179.       எப்பொழுதே னுந்தனித்தே யானிரேனே யென்றுமேயென் னோடிருக்கின் றார்தாவே
              இப்பொழுது றைக்கிறேனு மக்கிவையே யென்னிடமுண் டாகவுமக் கேநிமதி
              எப்பொழுது மிவ்வுலகி லுங்களுக்கோ துன்பமுண்டே நிசமெனது நாமமதால்
              இப்பொழுது திடன்கொள்வீர் ஏனெனிலோ யான்செயித்தே னேயுலகை யென்றனரே.

180.       குருபரனா ரீவையெலாஞ் சொல்லியபின் குணமருள்தங் கண்களைவா னேறெடுத்தே
              திருவுருவான் திருவுளமும் வாக்குமொன்றாய்த் திருப்பிதாவின் சமுகமதி லூக்கமொடே
              அருள்சுரந்துள் ளம்முருகி யன்பொடுமே துயருறுமச் சீடரைப்பின் சேர்பவரை
              அருட்பிதாவே திருவுளங்கொண் டன்பொடுமே யரவனைத்தே காத்தருள வேண்டினரே.

 157.பரிந்துமன்றாட்டு. யோ. 17.

181.       வந்ததே வேளை யப்பா வானவர் தொழுங்கோ மானே
              வந்ததுஞ் சித்தந் தானே பூர்த்தியாம் நாளுந் தானே
              வந்ததே பாருக் கென்னை வான்பலி செலுத்தும் வேளை
              வந்ததே யெனக்கே நீரே மாட்சிமை யருளும் வேளை.