182. மகிமையே செய்தற் காயே யுமைத்திரு மகனே தந்தாய் மகிமைசெய் வீரே தந்தாய் உமதுட மைந்தன் தம்மை மகிமையாம் யாவுந் தாமே வகையொடு களைந்தே வந்தார் மகிமையா ருஞ்சித் தந்தான் மகிமை நிறைவே றற்காய். 183. உந்தமின் திருமைந் தற்கே உவந்தளித் திருந்தோ ராமே மைந்தரோ மனுடர் கட்கே மறைந்தழி யாதாஞ் சீவன் மைந்தனே யருளத் தாமே மனுடரா மனைவர் மேலும் மைந்தனுக் கதிகா ரந்தான் மகிழ்ந்துமே யளித்தீர் மெய்யே. 184. ஒன்றா மெய்த்தெய் வந்தாம் ஓர்பிதா உமையே தானே பொன்றுமிவ் வுலகந் தானே புத்துயி ரடைதற் காயே நன்றுநீ ரனுப்பி னோராம் நற்கிறித் தியேசை யுந்தான் நன்றுய அறிவ வேதான் நித்திய சீவன் நன்றே. 185. நலமொடு மிவணே செய்ய நலமுறுங் கிரியை தந்தீர் நலமிக முடித்தே யும்மை மகிமை செய்தேன் யானே உலகமே யுதிக்கும் முன்னே உமதிட மெணக்குண் டான நலமிகு மகிமை யாலே மகிமை செய்வீ ரையே. 186. எடுத்திவர் மனுடர் தம்மை யிதுவுல கிருந்தே நீர்தாம் கொடுத்தவ ரிவர்க்கும் நாமம் குணழுறத் தெரிவித் தேனே அடுத்தவ ரிவருஞ் சொந்தம் அவரை யெனக்கீய்ந் தீரே எடுத்துமே யவர்கைக் கொண்டார் இணங்கியும் வசனத் தைத்தான். 187. உவந்தெனக் களித்த யாவும் ஆயின தும்மா லென்றே தவறிலா தறிவா ரிப்போ தட்டிலா தீய்ந்தே னிப்போ உவந்துநீ ரெனக்குந் தந்த உம்முரை யேயன் னோர்க்கே அவர்களம் வசனத் தைத்தா மேற்றன ரேயன் போடே. 188. அறிந்துளார் மெய்மெய் யாயே யுமதிடம் நின்றே யப்பா இறங்கியே மனமு வந்தே யிப்புவி வந்தே னென்றே திரமொடு மறிந்தே யல்லால் திடமொடே விசுவசித் தாரே அறம்வளர்ந் துயரு மாறே யனுப்பினீ ரிங்கே யென்றே. |