பக்கம் எண் :

திரு அவதாரம்315

 

189.       வேண்டுகின் றேனீ வர்க்காய் உலகிதற் காய்வேண் டேனே
              வேண்டுகின் றேனிப் போதே விரும்பிநீ ரீய்ந்தோர்க் காயே
              ஈண்டிவ ருஞ்சொந் தந்தான் எனதெது முமதே யாவும்
              ஆண்டும தான தேதும் அவையெலா மெனதே தானே.

190.       இருக்கிறேன் மகிமைப் பட்டே யிவர்களி லிப்போ தானே
              இருப்பதோ இலையே யானே யினியிது லோகிற் றானே
              இருப்பரே யிவர்கள் தாமே யிதுபுவி யினிலே தானே
              வருகிறே னிவணே நின்றே வருகிறே னும்மண் டைக்கே.

191.       பரிசுத் தாவென் தந்தாய் தூயராம் பரனே வேந்தே
              ஒருமித் தென்றும் யாமே ஒன்றா யிருப்பான் போலே
              ஒருமித் திங்கே யீவர் ஒன்றா யிருக்கத் தானே
              திருவுயர் உம்நா மத்தால் திடப்படுத் திக்காப் பீரே.

192.       பார்த்துவந் தேனே யானே பாரினி லிருக்கும் போதே
              காத்துவந் தேனே யுந்தங் கண்யமா ருயர்நா மத்தால்
              காத்துவந் தேனிம் மட்டும் நீர்கனிந் தளித்தோர் தம்மை
              போற்றவே யின்னோர் தாமே புண்ணிய வுமது நாமம்.

193.       கெட்டவ னொன்றே மாந்தன் இவருளே யவனே கெட்டான்
              திட்டமாய் வேத வாக்கே திடமொடே நிறைவே றற்கே
              கெட்டன றில்லை மற்றோர் கெடவிலை யெவனுந் தானே
              கெட்டுமே போகா வண்ணம் கெடியொடே யவரைக் காத்தேன்.

194.       உம்மிடம் வருகின் றேனே உலகினி லிருந்திப் போதே
              என்னுட சந்தோ டத்தை யிவர்பெற நிறைவாய்த் தானே
              இம்மையி லிருக்கும் போதே இவைகளை யுரைக்கின் றேனே
              உம்முட வசனந் தன்னை உவந்தவர்க் களித்தேன் நன்றே.

195.       உலகின ரல்லா ரீவர் உலகினன் யானல் லேன்போல்
              உலகின ரல்லா லஃதால் பகைத்ததே யுலகின் னோரை
              உலகினின் றேயின் னோரை யெடுக்கவே வேண்டே னும்மை
              விலக்கவே வேண்டு கின்றேன் வினைநிறை தீமை நின்றே.