பக்கம் எண் :

316

 

196.       சத்திலா உலகீ தற்கே சற்றெனு முரியே னல்லேன்
              சத்திலா உலகுக் கென்போற் சற்றெனு முரியோ ரன்றே
              சத்தியத் தாலின் னோரை சத்பிர றிட்டை செய்யும்
              சத்திய மஃதோ வுந்தஞ் சத்திய வசனந் தானே.

197.       அனுப்பினீ ரெனைப்பூ லோகில் அதுவிதம் யானன் னோரை
              அனுப்பியே யிருக்கின் றேனே அதுபூ லோகிற் றானே
              இனிதுற இவர்க்கா யென்னை பரிசுத் தஞ்செய் கின்றேன்
              இனியிவர் சத்யத் தாலே யின்பிர திட்டை யாக.

198.       இவரது நிமித்தந் தானே வேண்டுவ தல்லா லின்னும்
              இவரது வசனத் தைத்தான் இனிதொடு மேற்றுக் கொண்டே
              இவரொடு திடமா யென்னை விசுவசிக்கின்றோர் யாரோ
              அவருட நிமித்த மாயும் வேண்டுகின் றேனன் பாயே.

199.       ஈண்டிவர் இப்பூ லோகில் பொருந்தியே யொன்றாய் நிற்க
              பூண்டுநீ ரெனில்யா னும்மிற் பொருந்தியே யிருப்பான் போலே
              ஈண்டிவர் களும்நம் மோடே யிணைந்திருப் பதனைக் கண்டே
              ஈண்டனுப் பினீரே யென்றிவ் வுலகுவிஸ் வசித்தல் வேண்டும்.

200.       ஒன்றியா மிருப்பான் போலே யிருக்கவீ வருமே யொன்றாய்
              நன்றுநீ ரெனக்குத் தந்த மகிமை யிவர்க்கிய்ந் தேனே
              என்றுமே யொருமைப் பாட்டில் வளர்ந்திவர் வரவே தேறி
              இன்றுமைப் பிரார்த்திக் கின்றேன் இரங்குவீ ரென்தன் தந்தாய்.

201.       எனையனுப் பினீரே யென்றும் நீரெனை நேசித் தாற்போல்
              இனும்நீர் இவரை யின்பாய் நேசிக் கின்றீ ரென்றும்
              மனுவுல கறிதற் காயே யிருக்கவே நானின் னோரில்
              எனிலுநீ ரிருக்க வேதான் வேண்டுகின் றேனென் தந்தாய்.

202.       என்தனின் மகிமை யேதான் நீரெனக் கீய்ந்த தன்றோ
              அந்திரு மகிமை யோதான் அகிலமே தோன்றா முன்னே
              தந்ததே நீரே யக்கால் அன்பெனிற் கொண்டீ ரஃதால்
              அந்திரு மகிமை தன்னை யறியவேண் டும்நீ ரீய்ந்தோர்.