203. ஆதலி னெனக்கே நீரே யன்பொடு மீய்ந்தோ ரீவர் ஞாதியற் றோர்போன் றோராய் நாணிலத் திருப்பா ரன்றோ ஆதியே யெவண்யான் தங்கும் அமையி லென்னோ டேதான் காதலோ டிருக்கத் தானே கனிந்துமே விருப்பங் கொண்டேன். 204. நீதியுள் ளென்தன் தந்தாய் நிலவுல கறியா தும்மை ஆதியே யும்மை யானோ அனாதியா யறிந்துள் ளேனே நீதியே நீரே யென்னை யனுப்பினீர் நிசமே யென்றே கோதிலா தேயின் னோரே குறைவிலா தறிந்துள் ளாரே. 205. என்னிடம் நீரே கொண்டே அன்பிவர் மேலுந் தங்க இன்னும வர்க்குள் யானு மிருக்கவே யென்றுந் தானே மன்னுமும் நாமந் தன்னை மகிமை யாய்த்தெரி வித்தேன் இன்னம வர்க்கே யானே யினிதுறத் தெரிவிப் பேனே. 206. திருவுரு வாமாச் சார்யன் திருப்பரன் சமுகந் தன்னில் இருக்குமோர் பதினோர் வர்க்காய் இனிவருஞ் சிசியர்க் காயும் திருவுள மார்ந்தே செய்த செபமுமே முடித்த பின்னர் திருத்துதிப் பாட்டுப் பாடிச் சிசியரோ டெழுந்தே சென்றார். பிரிவுவுரைப் பர்வம் முற்றிற்று. உத்தியோக காண்டம் முற்றிற்று. III. செய காண்டம். 1. சாத்தானை வென்ற பர்வம். திருக்குருவாய்த் தெய்வசுதன் மூவறாட வூழியமே செய்துநிறை வேற்றியுமே அருளுருவாய்த் துன்பமுற்ற மானுடருக் கற்புதமாய் நன்மைசுக மேயருளி வறுமையுறும் பாவியரே வான்வரங்கள் மாவளமா யுள்புறம்பும் பெற்றுய்யவே பொருதுமேகா விற்குருசில் வெற்றிபெறப் போகிறதோர் புண்யனடி போற்றுவோமே. 158.கெத்செமெனே. மத். 26 : 36 - 46; மாற். 14 : 32 - 42; லூக். 22 : 39 -46; யோ. 18 :1. 1. மருவிலா ஆடாய் மீட்பர் மாபவந் தீர்க்கத் தாமே திருப்பலி யாகு முன்னர் தமையா யத்தஞ் செய்ய மறுவியே காவிற் சென்றே நற்பெலன் பெறுதற் காயே எருசலேம் நகரே நீங்கி யேகினா ரொலிவத் தோப்பே. 2. ஒலிவமா மலையைச் சார்ந்தே ஒலிவார் தோப்பே யார்ந்தே நலமொடே நிமதி கொண்டே நலமுறுங் காவே சேர மலையினின் றிறங்கி யங்கே மலையிடைத் தாவி னூடே சலசலப் பொடுபாய்ந் தோடுஞ் சிறுநதி தாண்டிச் சென்றார். 3. முன்னொரு நாட்தா வீதென் மாவெழில் முடிவேந் தேதான் தன்மக னப்சா லோமே தன்னுட சத்ரே யாக தன்னகர் சாலே மென்னுஞ் சீர்பதி தன்னை நீங்கி இன்னல டைந்தோ னாக இந்நதி தாண்டி னாற்போல். |