36. மூணரை யாண்டுகள் முனிந்தனர் தள்ளினர் வேணதாய்க் குரூசினில் வினைகடை கண்டனர் காணவே காவலன் கடக்கவே கல்லறை நாணமில் பொய்யிதால் மறைக்கமு யன்றனர். 37. தீயவர் தீப்பகை யிதுவரை தீர்ந்ததில் மாயவே யிலையே மரத்தினில் மாண்டுமே காயமாய் நின்றதே கடந்துமே கல்லறை மாயமா யோங்கியே மலர்ந்ததே வன்பொயாய். 176.உயிர்த்தெழுந்த கர்த்தர் காட்சியளித்தல். அப். 1 : 3; கொரி. 15 : 5- 7. 38. சத்தியம் மாயுமோ சத்துரு மூலமாய் சத்திய மானதோ சத்யஜு வனேயாம் சத்தியம் வென்றதே சாவையும் வென்றதென் றுத்தம சீடருக் குண்மையாய்க் காட்டினார். 39. தரிசனந் தந்தனர் தம்மவர் காணவே மரியாள் கண்டனள் மாதருங் கண்டனர் பெரியவன் பேதுருஞ் சீடருங் கண்டனர் அறியவே யன்பரைந் நூறுவர் கண்டனர். 40. இவ்விதம் நம்முட இறைவனாந் தற்பரன் செவ்விய தமதுட சிஷியரின் மனதிலே எவ்வித மயக்கமே யெழும்பா திருக்கவே திவ்விய தரிசனஞ் சிறப்பொடு மளித்தார். 177. பேதுருவுக்குக் காட்சி. லூக். 24 : 34. 41. மறுதலித் தவனாம் பேதுருவை மயங்கியே நெஞ்சுநொ றுங்கிணனை திருத்தியே திரமனத் தீர்க்கனாக திடமிகுஞ் சாட்சியு மாக்கவுமே அருளுரு வாம்நம தன்பரவர் அளித்தன ரேதனிக் காட்சியுமே திருவுரை முவந்தவன் துரோகத்தை யருளொடு தீர்த்துமே தேற்றவுமே. 42. தரிசனம் பெறவே தளர்ந்தனனே தரையினில் விழுந்தே வணங்கினனே பெரியது ரோகமே புரிந்தவன்யான் பெரியபா தகனே யாயினேனே அரியதே பவமனிப் பேபெறுதல் அதிபெருங் கொடும்பவ மிளைத்தவனே பெரியவா கருணையே புரிந்தெனது பெரும்பிழை பொறுமென இரந்தனனே. |