பக்கம் எண் :

திரு அவதாரம்365

 

43.        எழுதுமே தொழுதே புரண்டனனே யருட்பரன் திருவடி தழுவினனே
              தழுதழுப் பொடுமுரைத் திரந்தனனே தனைவெறுத் தழுதே புலம்பினனே
              பழுதெது மிலர்புக ழருட்பரனே கைவரின் பிழையும் பொறுப்பவரே
              தொழுதுமே விழுந்தழுந் தொழும்பனையே யெடுத்துமே யணைத்தவன் துயரகற்றி.

44.        அப்பா வுனின்பிழை மறந்தேனே திரும்பியன் றுனையே பார்த்த ஷணம்
              தப்பா துனைநிலை நிறுத்தவுமே தயவுகொண் டுனதிடம் வந்ததிப்போ
              இப்பா லுனதுட வூழியமோ உளதினந் தோழரைத் திடப்படுத்தல்
              இப்பாழ் புவியே யடையரட்சை யிணையறு சாட்சிக ளாகவென்றார்.

178. இரு சீடர்க்குக் காட்சி. மாற். 16 : 12, 13. லூக். 24 : 13 - 35.

45.        எருசலேம் பட்டண மிருந்தெழுந்தார் சீடரா மிருபே ரித்தினமே
              இருவரெம் மாவூர்க் கெழுந்தனரே ஏழல தெண்மயி லேதூரம்
              இருவரி லொருவனோ கிலேயொப்பா ஏகின ரிருவருங் கவலையொடே
              இருவரும் பேசிந டந்தனரே இத்தினம் நிகழ்ந்தவை யெருசலேமில்.

46.        இருவரு மிதுவழி போம்பொழுதே யிவரொடுஞ் சேர்ந்தனர் ஜேசுபரன்
              இருவரு மறியவே யிலையவரை மறைந்திருந் தனவே யிவர்விழிகள்
              ஒருவரோ டொருவரை பேசுவதென் விசனமா யிருப்பதே னுமதுமுகம்
              அருளொடு மவரையே வினவினரே அவர்களுள் கிலெயொபா பதிலுரைத்தான்.

47.        அந்நிய ரோஇவ ணறிந்திலீரோ இதுதினம் நிகழ்ந்தவை யெருசலேமில்
              இன்னவை யாதென எனக்குரைப்பீர் வினவின ரவர்களை ஜேசுபரன்
              இன்னவை யேசுவைக் குறித்தவையே யிவர்ஜன மனைவரு மறியவுமே
              மன்னுமா தெய்வமுன் னிலையிலுமே மிகவலர் உரையிலுங் கிரியையிலும்.

48.        தீர்க்கனாந் தரிசியே யிஸரவேலை மீட்பவ ரெனநம் பினோந்திடமாய்
              ஆக்ரமித் தவரையே பிடித்தனரே யர்ச்சக ரதிபரு மானவரே
              ஆக்கினை விதித்தே யரைந்தனரே குருசினில் முடித்தனர் தம்பகையே
              போக்கினோ மிதுவரை திரிதினங்கள் புண்ணியர்க் கிவைகளை நேர்ந்தபினால்.

49.        அதிகா லையிலே சென்றனரே யருமையா மாதரே கல்லறைக்கே
              பதிவாய் வைத்துள சடலத்தைப் பரிவொடு தேடியுங் காணவில்லை
              அதிவிரை வாயவர் திரும்பினரே யணுகியே சீடரா மெங்களையே
              அதிசய செய்தியு ரைத்தவரே யதிபிர மிக்கவே செய்தனரே.