62. அவசியங் கிறிஸ்தே அவசிய மவருயிர்த் தெழுதலுமே அவசிய மெவர்க்கும் மனமாறல் அவசிய மெவர்க்கும் பவமனிப்பும் அவசிய மேவணுள நாட்டவர்க்கும் அருள்மிகு சுவிசே டமுனைத்தும் அவசிய மூமதுட ஊழியமும் அவர்களுக் கிவையெலா மறிவிக்க. 63. எருசலேந் தொடங்கியே யகிலமெங்கும் அறிவியு மிவையவர் நாமத்தில் எருசலேம் நடந்ததா மிவைகளுக்கே யிணையிலாச் சாட்சிக ளாவீரே தருகிறே னுமக்குமிக் கவசியமாந் தகுபெலன் நற்கிரு பாகரமே பெறும்நீ ரருட்டிரு அரூபியரை பெறுமென் றூதின ரேயவர்மேல். 64. இங்கெனை யனுப்பினர் பரமபிதா இங்குமை யதுவித மனுப்புகிறேன் இங்கெவர்க் கருள்வீர் பவமனிப்பே யின்புறப் பெறுவார் பவமனிப்பே இங்கெவர்க் களியீர் பவமனிப்பே பவமனிப் பிலையே யவர்களுக்கே இங்குமக் கருள்கிறே னிதுவூழியம் இன்போ டதையே நடத்துமென்றார். 180. சீடர்தோமாவுக்குக் காட்சி. யோ. 20 : 24 - 29; மாற். 16 : 14. 65. வந்தவ ராம்ஆ றிருவருளே எதனிலு முந்துவோன் பேதுருவே எந்தவி தமுமே தணியாத எழில்மிகு அன்புளோன் யோவானே சிந்தையே மருளாத் திடமனதோன் செலோதே சீமனாம் வைராகி சந்ததமே சந்தே கீயெனினும் தவறான் தாமஸ் திதிமுவென்போன். 66. தரிசனஞ் சீடரே பெறுஞ்சமையம் திதிமுவோ அங்கிருந் தானிலையே கரிசனை யொடுமே சிஷியர்தாம் கர்த்தரைக் கண்டோம் என்றனரே அறிந்திலேன் நீர்சொலு மெதனையுமே ஆணியின் காயமே காணாதே தெரியவே யென்விர லதிலிடாதும் தீண்டா தும்விலா என்கரத்தால். 67. என்றுமே நம்புவ திலையிதையே யிதுநிசஞ் சொல்கிறே னுறுதியாயே என்றவன் செப்பினன் பிடிமுரண்டாய் அடுத்தஎட் டாந்தின மிதேபொழுதே என்றுமே தாங்குவோ ரடியவரை எளியவ னின்னவன் விசுவசமே குன்றிமே மறையா திருப்பதற்காய்க் குணமுறத் தரிசனந் தந்தனரே. 68. இருந்தனர் சிஷியர் வீட்டினுள்ளே யிருந்தனன் திதிமுவு மவரொடுமே இருந்தன கதவுகள் பூட்டியுமே யெழுந்தார் திருப்பர னவர்நடுவில் பொருந்தவே யுரைத்தன ருங்களுக்கே புகழ்மிகு நிம்மதி யெனவுரைத்தே அருளொடும் விளித்தார் தாமசையே மொழிந்தன ரருள்மிகு மொழிகளையே. |