பக்கம் எண் :

திரு அவதாரம்369

 

69.        காட்டியே தமதுட கரங்களையே நலமொடென் கரங்களை நோக்குவையே
              நீட்டுவை யுனதுட விரலைவண் இடுவையே நிகழ்ந்தவிக் காயத்தில்
              நீட்டுவை யுனதுட கரத்திளையே தொடுநீ யென்விலா சிந்தனைசெய்
              ஓட்டுவை யுனதுட அவிஸ்வாசம் உறுதிகொள் திடவிசு வாசியென.

70.        நீட்டுவ னோஅவன் தீண்டுவனோ நிலைத்தனன் தோமா சந்தேகி
              ஓட்டினன் தனதவிஸ் வாசமுமே யுடன்முழந் தாளினில் வீழ்ந்தனனே
              காட்டினன் திடவிசு வாசமுமே கடிதினில் யாவருங் கண்டறிய
              போட்டனன் சத்தமே போதுமையே எனதுட ஆண்டவா தேவாஎன.

71.        கண்டா யெனையே தோமாவே கண்டபின் கொண்டாய் விசுவாசம்
              கண்டுமே நம்புமா மானுடரில் காணா நம்புவோர் பாக்கியரே
              விண்டுமே யிம்மொழி யஷணமே வென்றவர் மறைந்தே யகன்றாரே
              கண்டவ ரீதைம கீழ்ந்தனரே கனவிசு வாசிய ராயினரே.

181. கடற்கரையிற் காட்சி. யோ. 21 : 1 - 23.

72.        சென்றனர் சீடரே கலிலிநாடே சேர்ந்தவ ணங்கபர் நாகூமூர்
              சென்றவர் தரித்தன ரப்பதியில் செய்யவே தொழிலெது மிலதவராய்
              ஒன்றுமே செய்மொழி லிலதவராய் ஓய்ந்திருப் பதுநல மலநமக்கே
              சென்றியாங் கடலிலே மீன்பிடிய்போம் செப்பினன் சைமனாம் பேதுருவே.

73.        சேர்ந்தனர் சிஷியருள் ளாறுபேரே திதிமுவாந் தோமா வெனுஞ்சீடன்
              பாந்தமாங் கலீலீ நாட்டிலுள பகர்கா னான்நாத் தான்வேலும்
              சேர்ந்தனர் யாக்கோப் ஜானிருவர் செபதெயு மக்களே யிவ்விருவர்
              சேர்ந்தனர் வேறிரு சீடருமே கலீலீக் கடற்கரை சேர்ந்தனரே.

74.        வாட்டமாய்ச் சீடருட் கார்ந்தனரே விரைந்துமே வலையொடுமோர் படவில்
              ஓட்டின ரவசர மாய்ப்படவை யடைந்தன ருட்கடல் சீக்கிரமாய்
              போட்டனர் வலையா ளத்நினிலே பொறுமையா யுழைத்தார் ராமுழுவதும்
              வேட்டையோ அகப்பட வில்லையெதும் வெறுமையாய்த் திரும்பினர் காலையிலே

75.        கடற்கரை யோரமே வந்துநிற்கக் கருணையார் பரன்கிறிஸ் திதுபொழுதில்
              திடமிழந் தோராஞ் சீடரிவர் தெரிந்தில ரவர்திருப் பரனெனவே
              படவினி லேது டோபுசிக்க பகர்வீர் பிள்ளைகாள் எனவினவ
              படவினி லேதுமில் லென்றனரே படவினி லிருந்தவ ராஞ்சிஷியர்.