பக்கம் எண் :

40திரு அவதாரம்

 

18, முதற்சீடர் யோ. 1 : 35 - 51

90.         திரும்பிநோக் கினரருட் பரன்கிறிஸ்தே சிஷியரவ் விருவரைக் கண்டனரே
              அருளொடு வினவினர் திருப்பரனே அவசியம் எனவோ தேடுவதென்
              "தருகவி டையே நீர்குருபரன் தருகு மிடமெது" என்றுரைக்க
              வரும்படி யழைத்தன ரிருவரையும் உரைத்தனர் வந்திவண் பார்த்தறியும்.

91.         அங்குபின் சென்றன ரந்நிமிஷம் அவ்விரு சிஷியரு மாவலொடே
              தங்கிய தாமிடம் அத்தனொடுந் தாண்டியே யடைந்தார் மாமகிழ்வாய்
              அங்கவர் சேர்ந்ததாம் நேரமதே ஐயிரு மணியாம் நான்குமணி
              சங்கை சற்குரு அண்ணலொடே தங்கின ரவர்களந் நாள்முடிய.

92.         அவருட னிருந்துமே ரண்டுபேரும் அவருட பண்புகண் டறிந்தனரே
              அவருட திருவுப தேசமுரை அமர்ந்துணர் வொடுமே கவனித்தார்
              அவர்வெறு மனுடனே யல்லபரன் அருட்கிறிஸ் தண்ணலென் றறிந்தனரே
              அவர்தம் துடகுரு வென்றறிந்தார் அவர்முதற் சீடரு மாயினரே.

93.         இருவரி லொருவனோ பேதுருவின் இளையச கோதர னந்திரேயா
              குருபர னையேயடை மாமகிழ்வால் குணமொடு வந்தனன் அண்ணனிடம்
              திருப்பர னருளிய கிறிஸ்துவையே தினமதிற் கண்டனம் என்றுரைத்தான்
              குருபரன் திருக்கிறிஸ் தண்ணலிடங் கொணர்ந்தனன் தன்னுட சோதரனை.

94.         மாபா வந்தீர் மறியிவனின் மாண்பறிந் துரைத்தன ரிதுவசனம்
              கேபா வென்றழைக் கப்படுவாய் கேண்மையோ னாமகன் சிமியோனே
              கேபாச் சொல்லெபி ரேயுமொழி க்ரீக்குமொ ழியிலே பேதுருவாம்
              கேபாச் சொற்றமிழ்ப் பாடையிலே கெட்டியாங் கன்மலை யென்பொருளே.

95.         திருவுளங் கொண்டனர் திருக்குருவே திரும்பியே கலீலியென் னாடுசேர
              மறுதினங் கண்டனர் பிலிப்புவையே "எனதுபின் வருக" வென் றேயழைத்தார்
              இருவரா மந்துரு சிமியனெனும் இவர்களின் சுயபதி யானவனே
              சிறுபெத் சாயிதாப் பதியிலுளோன் சிஷியனே யாயின னிவரொடுமே.

96.         கண்டனன் பிலிப்புநாத் தானுவேலை கனிந்தவற் குரைத்தன னிதுவிடயம்
              கண்டனம் தரிசியர் மோசையொடுங் கனமிக எழுதியே யிருப்பவரை
              நன்றிவர் பெயரோ ஜேசுபரன் நசரதென் பதியே யவரதூரே
              அன்றியும் நசரேத் ஜோசபென்போன் அருமையாம் புதல்வனா யிருப்பவரே.