97. என்றிவன் சொல்அவ னிகழ்ந்தனனே இதுசெவி யுற்றவன் நாத்தான்வேல் "நன்றிதே மிகநலம்; இசைப்பதென்னோ நசரதாம் மாவெழில் நற்பதியோ? நன்றெது விஷயமும் நசரதிலே நலமொடு தோன்றுவ துள்னதோசொல்" என்றிவ னிகழவே பிலிப்பென்போன் இணக்கமாய் "வந்துபார்" என்றனனே. 98. வந்தனன் நாத்தான் வேல்மனுடன் தனதுட மனதுசந் தேகமற வந்துசே ரவுமே ஜேசுபரன் வரவுகொண் டனரே மாவருளாய் இந்தவோர் மனுடன் கபடமில்லா இணையிலுத் தமஇஸ் ரேலனென்றார் அந்தமா யதுவிதங் கூறவுமே" அறிந்ததும் எதுவிதம் என்றனனே. 99. அறிந்தது மெதுவித மென்றுரைத்தாய் அறிந்துகொள் ளுரைக்கிறே னுந்தனுக்கே அறிகுவே னுன்தனை யுனைப்பிலிப்பே அருமையா யழைத்ததற் கேமுனமே அறிகுவை அத்தியி னடியினிலே இருக்கிற சமையங் கண்டதுண்டே அறிகிறேன் நீர்திருச் சுதனெனவே அறிகிறே னிஸ்ரேல் ராஜனென. 100. கண்டுளேன் அத்தியின் அடியிலென்ன கனவிசு வாசமே கொண்டனையே விண்டுமே சொல்கிறே னிதிற்பெரிய வியப்புமே கொள்வாய் கண்டவற்றை அண்டமுந் தாண்டிய ககனமதே யகன்றுதி றக்கவே காணுவீரே மண்டலம் மனுமக னிடமிருந்தே யெழும்பவு மிறங்கவுந் தூதருமே. 101. இந்தவி தம்பர னையடைந்தார் இசைந்தவ ரைவராம் முதற்சிஷியர் வந்தன னந்துரு வோடருளன் வகையொடு சிமியனும் பிலிப்புவுமே வந்தனன் நாத்தான் வேல்சிஷியன் வரிசையா யிவரேலாந் தொடர்ந்தனரே இந்தவி தந்தம் மூழ்யமதை இறைவனே துவக்கினர் யூதநாட்டில். II.( 1 ) உத்தியோகப் பிரவேசப் பர்வம் முற்றிற்று. |