2. உத்தியோக ஆரம்பப் பர்வம் 19. முதல் அற்புதம் - யோ. 2 : 1 - 12. 1. ஒருமணம்நி கழ்ந்ததுகா னாவெனுமோ ரூரினில்மூன் றாந்தினமே சீர்மிகவே திருக்குருவின் தாயரம்ம ணத்தினுக்கே சீரழைப்புப் பெற்றவணேவணே போயிருந்தார் திருக்குருவுந் தம்முடைய சீடரொடே சீரழைப்புப் பெற்றிருந்தா ரேயதற்கே திருவுளமு வந்துமேநம் ஜேசுபரன் சென்றவணே சேர்ந்தனரே சீடரொடே. 2. மங்களஞ்சி றப்பொடுந டந்ததுவே மணமகரும் மற்றவரு மேமகிழ இங்கிதமாய் யாவுமண வீட்டினில்நி கழ்ந்திடினும் சீர்மிகுசி றப்பொடுமே அங்குளவி ருந்தினராம் யாவருமே யாவையும னுபவித்தும் ரம்மியமாய பங்கமேய டைவதற்கே யவ்வகத்தார் பந்தியிற்றி ராக்ஷைரசங் குன்றியதே. 3. நிலையிலையே யேதெனினு மிப்புவியில் நித்தியமே யில்லைபுவி வாழ்வினிலே நிலையிலையே யிப்புவியி னின்பமெதும் நித்தியமே யில்லைபுவி ஜீவியமே நிலையிலையே யிங்குமண வின்பமெதும் நீங்கியதே மாறிவிருந்ருந் துக்கமாயே நிலையிலையே யிந்தமண வின்பமுமே நித்தியனே யில்லையெனில் வீடிதிலே. 4. விருந்ததனி னீறுதின நாளினிலே விருந்தினர் மாளிகையிலே பந்தியினில் அறிந்தனரே ஜேசுபரன் தாயரிதை மகனிடமே யாத்திரமாய் வந்தனரே 'அருந்துவதற் கில்லைரசம்' என்றனரே என்னவோஎ னக்குமுடிக் கன்னையரே தருணமாகு மென்னுடைய வேளையேதான் இச்சமையம் வந்ததில்லை என்றனரே. 5. அம்மணோஅ ழைத்தனரே யூழியரை அவர்களுக்கோர் கட்டளையு மிட்டனரே என்மகனே யாதுமேசெய் யச்சொலில்நீர் இனமொடுமே யதனைநிறை வேற்றுமென்றார் எம்பரனு மேயழைத்தா ரூழியரை இவர்களுக்கோர் கட்டளையுமிட்டனரே செம்மையாய்நி ரப்புவீரே ஜாடிகளைத் தெளிந்ததாம்நற் றீர்த்தமதால் என்றுரைத்தார். |