6, கழுவுவரே யூதரேதங் கால்கரங்கள் சற்றுநேரம் போய்க்கடைக்கே வந்தபினால் கழுவுவரே யவ்விதமே தங்கரங்கள் கண்ணியமாய்ப் பந்தியில மர்கையிலே வழுவவிடா திம்முறைந டப்பதற்கே வைத்திருப்பார் யாரெனினுந் தீர்த்தமேதான் தழுவியுமே யிம்முறைந டப்பதற்கே ஜாடிகளங் கேயிருந்த மூவிரண்டே. 7. மொண்டுமேநி ரப்பினரே தீர்த்தமதால் மூவிரண்டு ஜாடிகளும் பூரணமாய்க் கொண்டுபோய்க்கொ டுங்குறைவே தும்வராதே பந்தியைவி சாரணைசெய் மாந்தனிடம் கொண்டுபோய்க்கொ டுத்தனரன் னோனிடமே மாருசியே கொண்டஅந்தக் கந்தரசம் கண்டவரோ ஈதுபணி யாட்களலால் கண்டவர்வே றாருமில்லை வந்தவிதம். 8. வந்ததொரு வண்ணமறி யாதிருந்த பந்தியைவி சாரணைசெய் மானுடனே சுந்தரச மானவிதைப் பார்த்துருசி கண்யமண வாழணைய ழைத்துரைத்தான் "எந்தவொரு மானுடனும் முன்தருவான் நல்லருசி யாம்ரசமி ழிந்ததையோ பிந்தியேகொ டுப்பனேநீர் நல்லரசம் பேணியேவைத் தேயிருந்தீர் இம்மட்டும்" 9. வெறுஞ்ஜலமே நல்லரச மாகவேசெய் விந்தைமுத லற்புதமா மீதுசெய்தோர் வெறுமனுட னேயலப ரத்திருந்தே யிங்குவந்த விண்ணவரே யென்றெவரும் பெரும்வியப்ப டைவதற்கே தம்முடைய பேர்மகிகை வல்லமைவி ளக்கினரே பெரும்வியப்ப டைந்தனரே சீடருமே கொண்டனர்பேர் விஸ்வசமே யண்ணலார்மேல். 10. ருசியெதுமே யற்றதொரு தண்ணீரே ருசிமிகுந்த நல்லரச மானதுபோல் ருசியதே யிழந்ததான யூதமதம் ருசிமிகவே யுள்ளதாகச் செய்வரென ருசியெதுமே யற்றவராம் பாவியரை சுசிருசியே யுள்ளவராய் மாற்றியுமே ருசிமிகவே யுள்ளவராய்ச் செய்வரென ருசுசெயுமோர் நல்விடய மாயினதே. 11. திருமணநிகழ்ச்சிகளே பூர்த்தியுற செம்மைமிக வேவிருந்தும் முற்றுறவே திருமகனார் தம்முடைய சீடரொடே சேர்ந்தராஞ்ச கோதரர்தம் மன்னையரும் விரும்பியவுற் றாரிடமே பெற்றுவிடை நீங்கினரே யந்தமண வீட்டினின்றே விரும்பியேய டைந்தனர்கப் பர்நகூமே வீடெடுத்து மேவசித்தா ரத்தலத்தில். |