பக்கம் எண் :

44திரு அவதாரம்

 

20. எருசலேம் தெய்வாலயச் சுத்திகரிப்பு. யோ. 2 : 13 - 25.

12.        அங்குமேசின் னாட்களேதான் தாமதித்தார் செய்தனர ருள்மிகுமோ ரூழியமே
              மங்கியேபோ காமூன்று பண்டிகையிற் கிட்டிவந்த தேபஷாவென் பண்டிகையே
              எங்கெவணு மேயிருந்தும் யூதஜனம் ஏகமாயெ ருசலேமே செல்வதேபோல்
              இங்கிருந்தெ ழுந்தனரே ஜேசுபரன் சேர்ந்தனரெ ருசலேமே சீடரொடே.

13.        ஆலயத்தின் சந்நிதியில் மாடுகளை ஆடுகள்பு றாக்களையும் விற்பவரை
              காலையிலே யூதியமே தேடுவோராம் காசுக்கடைக் காரரையும் கண்டனரே
              சாலவேகொண் டார்விசனம் ஜேசுபரன் கொண்டதோர்க யிற்றினார்ச வுக்கமைத்தே
              வேலையில்லா ஜீவஜெந்து மானுடரை ஓட்டிவெளி யேதுரத்தி னார்பரனே.

14.        காசுக்கடைக் காரரைக்க டிந்தனரே கொட்டினார்கா சுப்பலகை யாமனைத்தும்
              காசுகளே யாவையுமே கொட்டினரே கடிந்தனர்பு றாக்களையே விற்பவரை
              பேசாத னைத்துமப்பு றப்படுத்தும் என்பிதாவின் வீட்டிவிருந் தேகுவீரே
              மாசிலாப்பி தாவினுட வீட்டையேநீர் வர்த்தகவீ டாக்காதீ ரெச்சரிக்கை.

15.        திருட்டுப்பொய் தீமைகள்நி றைந்தவர்தீட் டாக்கினரே கர்த்தருட ஆலயத்தை
              திருச்சுதனே யானவர கற்றியேதீட் டாக்கினவை நீக்கியேசுத் திகரித்தார்
              திருவுமது வீட்டையே குறித்ததொரு தீர்க்கவயி ராக்கியம்பட் சித்ததென்ற
              திருமறையே கூறுவதாம் வாக்கினையே சீடருமே நினைந்தனரே யச்சமையம்.

16.        இவைகளையே கண்டவராம் யூதருமே இயேசுவிடம் வத்துமேயோர் கேள்விகேட்டார்
              இவைகளையே செய்கிறீரே யீவைசெய்ய ஏதுஅடை யாளமோநீர் காட்டுகின்றீர்
              எவைகளிலும் மேன்மையிவ் வாலயத்தை எளிதினிலி டித்துமேநீர் வீழ்த்திவிடும்
              எவருமறி யாவிதமாய் முத்தினத்தில் எழுப்புவேனே வெளிதாயிதை யென்றாரே.

17.        ஆலயமிம் மாளிகையைக் கட்டுதற்கே ஆண்டுகளே நாற்பதுமா றுமானதே
              ஆலயமெ ழுப்புதற்கோ மூன்றுதினம் ஆகுமென்று ரைத்ததென்னோ எவ்விதமாம்
              ஆலயமென் றேபரனார் சொல்லியதோ ஆலயமாந் தம்மூடசரீரமதே
              ஆலயமென் யெண்ணியதோ அம்மனுடர் ஆங்குளதா மாலயமாங் கட்டடமே.