த
10 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
6.
முன்னைப் பிறவித்
தவப்பயனோ !
முழுதும் அறியா
மூடனிவன்
என்னக் கருத்தில்
எண்ணியோ !
யாதோ அறியேன்,
இரவுபகல்
கன்னற் பாகிற்
கோற்றேனிற்
கனியிற் கனிந்த
கவிபாட
அன்னத் தொகுதி
வயற்கருவை
ஆண்டான் என்னை
ஆண்டதுவே.
இரவினும் பகலினும்
கருப்பஞ் சாற்றின் பாகைப் போலவும், கொம்புத் தேனைப்போலவும், முக்கனியைப் போலவும்,
சுவைகனிந்த பாடலைப்பாட அன்னக்கூட்டங்கள் வசிக்கும் வயல்சூழ்ந்த கருவாபுரியாளி என்னை அடிமை
கொண்டது, முற் பிறவியிற்செய்த தவப்பயனோ! சிறிதும் அறியாத மூடன் இவன் (ஆதலால் இவனுக்கு
அருள் செய்வோம்) என்று திருவுளத்திற் கருதியோ ! யாது காரணமோ அறியேன்.
கன்னல்-கரும்பு.
கோல்தேன்-கொம்புத்தேன். தொகுதி-கூட்டம்.
‘கவிபாடித் தன்னைத்
துதிக்கும் உணர்வைக் கொடுத்துக் கருவாபுரியான் என்னை ஆண்டான்’ என்பதால் கவிபாடும் திறமும்
முத்திப்பேறும் தமக்குக் கிட்டியமை கூறினார். கவிபாடும் திறம் கல்வியறிவாற் சித்திப்பது ;
முத்திப்பேறு தவத்தாற் சித்திப்பது. ஆனால் எவ்வறிவு மில்லாத மூடன் யான்; இப்பிறப்பில்
யான்செய்த தவம் ஏதுமில்லை. ஆதலால், எனக்கு நீ இவ்விரண்டையும் தந்தது-‘முன்னைப் பிறவித்
தவப்பயனோ ? முழுது மறியா மூடனிவன் என்னக் கருத்தில் எண்ணியோ ? யாதோ அறியேன்’ என்றார்.
(கன்னற்)
பாகு-காய்ச்சப் பெறுவது; அதுபோல்வது ஆராய்ச்சியால் வந்த அறிவு. (கோல்) தேன்-பல மலர்களினின்
றெடுத்துத்
திரட்டி வைக்கப்படுவது ; அதுபோல்வது பல நூல்களைக் கற்றும்
|