பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

11

கேட்டும் வந்த அறிவு. கனி-காலமுதிர்ச்சி யான் முதிரப் பெறுவது ; அது போல்வது அனுபவ முதிர்ச்சியான் வந்த அறிவு. இந்த மூவகை அறிவாலும் பிறந்த கவி பெரிதும் சுவையுடையதாம். அவ் வகைச் சுவைசான்ற பாடல் என்பது தோன்றக் ‘ கன்னற்பாகிற் கோற்றேனிற் கனியிற் கனிந்த கவி’ என்றார்.

    பாலோடுகூடிய நீரைப் பிரித்துப் பாலைத் தன்னுட்கொள்ளும் அன்னம்போலப், பசுவோடுகூடிய பாசத்தைநீக்கிப் பசுவைத் தன்னடியிற்சேர்க்கும் பதி என்பது தோன்ற ‘அன்னத்தொகுதி வயற்கருவை ஆண்டான்’ என்றார்.

    ஓகாரம் ஐயப்பொருளன. இன் உருபு ஒப்புப்பொருட்டு.        

(6)

7. ஆண்ட குரவன் ஆவானை,
        அல்லற் பிறவி அறுப்பானை,
    வேண்டும் பதவி தருவானை,
        வெளிவீட் டின்பம் அளிப்பானைத்,
    தூண்டல் செய்யா மணிவிளக்கைத்,
        தொழில்மூன் றியற்றும் தொல்லோனைக்,
    காண்டற்(கு) அரிய பேரொளியைக்
        களாவின் நிழற்கீழ்க் கண்டேனே.

    அருட்கண்ணா லடிமை கொண்ட ஞானாசாரியனாயுள்ளவனை, துன்பந்தரும் பிறப்பினை வேரோடு அறுக்கின்றவனை, அடியார் வேண்டும் பதவிகளைத் தருகின்றவனை, மோட்ச வின்பத்தைத் தருகின்றவனை, தூண்டாத மாணிக்க தீபத்தை, சிருஷ்டி முதலிய முத்தொழிலையுஞ் செய்யும் பழையோனை, காணுதற் கரிய பெரிய ஒளிப்பிழம்பாயுள்ளவனை, களாவின் நிழலின்கீழ்த் தரிசித்தேன்.

    குரவன்-குரு. அல்லல்-துன்பம். தூண்டல்செய்யா-தூண்டா. தொல்-பழைய.