த
100 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
படத்தின் புள்ளிகளையுடைய
ஒளிபொருந்திய பாம்பினை(ச் சடாமுடியில்) தரித்த பால்வண்ணப் பெருமானே! (யான்) நரகில்
விழுந்து வருந்தினாலும் உன்னிடத்தே (இடையறாத) பக்திசெய்திருத்தலை வேண்டுவதே யல்லாமல், (அந்தப்
பக்தி எய்தாதாயின், நரகத் துன்பத்தினின்று விடுபெறுதலை ஒரு பொருட்டாகக் கருதி) வீடு பேற்றையும்
விரும்பிலன் ; (போக நுகர்ச்சிக்கிடமான) சுவர்க்கப் பேற்றையும் விரும்பிலன் ; முனிவர்களால்
எய்தப்படும் (அணிமா முதலிய எண்வகைச்) சித்திப்பேற்றையும் விரும்பிலன் ; திக்குப்பாலகர்(களுள்
இர்திரகுபேரர்)க்குரிய சிறப்புக்களையும் விரும்பிலன்.
உத்தி-பாம்பின்
படத்தில் உள்ள புள்ளிகள் ; ‘உத்தியுந்துத்தியும் உரகப் படப்பொறி’ என்பது பிங்கலம்.
வாள்-ஒளி. ‘வசியும் ஒளியும் வாளென லாகும்’ என்பதும் அது. ‘வாள் ஒளியாகும்’ என்பது
தொல்காப்பியம். அரா-பாம்பு; ஈண்டு இயல்பாய் நின்ற இவ்வாகாரவீற்றுப்பெயர் குளியதன்கீழ்
நின்ற ஆக் குறுகி உகரம் ஏற்று
‘அரவு’ எனவும் வரும். உனது, ஏழாம் வேற்றுமை நிற்குமிடத்து ஆறாம் வேற்றுமை உருபு வந்த
உருபுமயக்கம்; நான்காம் வேற்றுமை உரிய தெனலு முண்டு; விஷயமாக உடைமை வேற்றுமைப் பொருளாகிய
சம்பந்தம் எனலுமொன்று. ‘நரகிடைப்படினும்’ என்பதில் உம்மை எதிர்மறைப் பொருளது. முத்தி,
சித்தி, சிறப்பு என்பவற்றில் உயர்வு சிறப்பும்மை தொக்கன. முத்தி-இருவினை யொழித்துப் பிறப்பறுத்துச்
சார்தற்கிடனான சிவநிலை : துறக்கம்-நல்வினைப் பயன் நுகர்தற்கு இடனான சுவர்க்கபூமி : இவற்றின்
வேறுபா டுணர்க. எண்வகைச் சித்தியாவன : ‘அணிமா மகிமா கரிமா இலகிமா-பிராத்தி
பிராகாமியம் ஈசத்துவம் மசித்துவம்என்-றோதற்கரிய அட்டமா சித்தி ’ இதனான் உணர்க. திசாதிபர்
எண்மர் ; அவ
|