த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
101 |
ராவார் ‘ இந்திரன்
அக்கினி இயமன் நிருதி-வருணன் வாயுகுபேரன் ஈசானன். ’
எண்மர்
திசாதிபருள் இந்திரனது பதவியும் குபேரனது சம்பத்துமே மக்கள் விரும்பும் சிறப்புடையனவாகக்
கோடல் மரபாதலின் அவர் இருவருமே கொள்ளப்பட்டனர்.
(88)
89.
சிறக்கத்
தக்கது கருவையான்
திருவடி
நேயம் ;
மறக்கத் தக்கது
மற்றுள
சமயத்தின்
மயக்கம் ;
துறக்கத்
தக்க(து)இவ் வுடம்பையான்
என்றுறு
தொடர்பு;
பிறக்கத் தக்கது
சிவானந்த
வாரியின் பெருக்கே.
திருக்கருவைச்
சிவபெருமானது திருவடிக்கீழ் வைக்கும் அன்பே சிறக்கத் தகுதியானது ; (சைவத்தின்) வேறாக உள்ள
மதங்களில் மயங்குதலே மறக்கத் தகுதியானது; இவ்வுடம்பை யான் என்று பற்றியிருக்கும் பற்றே
விட்டொழியத் தகுதியானது ; சிவானந்த வெள்ளமாகிய பெருக்கே உண்டாகத் தகுதியானது.
தக்கது -
தேற்றப் பொருள்பட்டு நிற்கும் தொழிற்பெயர் ; வியங்கோட் பொருட்டென்பது முண்டு.
நேயம்-அன்பு. தொடர்பு-பற்று. வாரி-பெருக்கு-வெள்ளம். வாரியின், இன் தவிர்வழிவந்த
சாரியை.
(89)
90.
பெருகு
காதல்கொண் டனுதினம்
பேதைநெஞ் சடியேன்
உருகி நாடவும்
வெளிப்படா
உனைஉளத்
துணர்ந்தேன் ;
இருக ணாரவும்
காண்பதற்(கு)
என்றெதிர்ந்
திடுவாய்,
கருகு கண்டனே !
கருவையிற்
களாநறுங்
கனியே!
|