பக்கம் எண் :

102

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    (நஞ்சுண்டதனாற்) கறுத்த கண்டத்தை உடையவனே ! திருக்கருவையின்கண் களாமரத்தின்கீழ் எழுந்தருளிய இனிய கனிபோல்பவனே ! அடியேன் மிகுந்த அன்புகொண்டு நாள்தோறும் (எனது) மூடமனம் உருகித் தேடவும் (என் ஊனக் கண் காண) வெளிப்படாத உன்னை (என்) உள்ள(க்கண் தெவிட்டும்படி கண்டு) அறிந்துகொண்டேன் ; (புறமான) இரண்டு கண்களும் தெவிட்டும்படியும் (யான் உன்னைத்) தரிசிப்பதற்கு (நீ) எப்பொழுது பிரசன்ன மாவாயோ ?  (விரைவில் பிரசன்னமாகித் தரிசனந் தந்தருள்.)

    ‘அடியேன் பேதைநெஞ்சுருகி’ என இயைக்க.

    நாட-தேட; ‘நாடவிட்ட படலம்’ என்பது காண்க.  இரு கண், என்பது இனைத் தென்றறி பொருளாதலால் முற்றும்மை வருவித் துரைக்கப்பட்டது.  ஆர்தல்-நிறையக்கொள்ளுதல் ; ‘கண்ணாரக்கண்டேன்’ ‘நாவாரத் துதித்தேன்’ ‘வாயார வாழ்த்தினேன்’ ‘செவியாரக் கேட்டேன்’ ‘வயிறார உண்டேன்’ ‘மனமாரச் செய் தேன்’ என வரும் வழக்கு நோக்கி உணர்க.  ஆரவும், என்பதில் உம்மையை இறந்தது தழீஇய எச்ச வும்மையாகக்கொண்டு, அதற்கேற்ப ‘ உளத்து ஆர உணர்ந்தேன் ’ என ஆர என்பது முன்னும் வருவித் துரைக்கப்பட்டது.  ஆரவும் என்பதன் உம்மையை ‘இரு கண்ணுமார’ என மாற்றிக் கோடலுமொன்று.  பெருகுகாதல், கருகுகண்டன்-வினைத்தொகை; முன்னது முக்காலத்ததும் பின்னது இறந்தகாலத்ததுமாம்.  கருவையின் இன்சாரியை ; ஏழாம் வேற்றுமையுருபு தொக்கது.

    பதிற்றுப் பத்தான இந்நூலில் இச்செய்யுள் ஒன்பதாம் பத்தின் இறுதி.  சென்ற எட்டுப் பத்துக்களினும் இப்பத்தின் முற்பகுதியிலும் திருக்கருவைச் சிவபெரு மானது திருப்புகழையும் தமக்கு அவன் மாட்டுள்ள பக்திப் பெருக்காகியவற்றையும் பலபட விரித்துரைத்த ஆசிரியர் இப்பத்தின் பிற்பகுதியில் தமது முடி