பக்கம் எண் :

108

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

இடபவாகனத்தின்மீது ஆரோகணித்துத் திருக்கருவையென்னும் சிறந்த நகரத்தின் வீதியின்கண்ணே எழுந்தருளிவரும் குற்றமற்றவனே ! வணக்கம்.

    கடையுகம்-யுகக்கடை; இலக்கணப்போலி.  பொழில்-பூமி; ‘புவியும் சோலை   யும் பெருமையும் பொழிலே’ என்பது பிங்கலம்.  ‘ஏழையும்’ என முற்றும்மை கொடுத்தார் ‘இனைத்தென்றறி பொருள்’ ஆதலின்.  கொளுத்துதல்-பற்றுவித்தல்; ‘அறிவு கொளுத்தினான்’ ‘கூரை கொளுத்தினான்’ என வருதல் காண்க.  கொளுத்திய சுடலை-எரித்த காரணத்தால் உண்டான காரியமாகிய சுடலை எனப் பொருள்படுதலின் ‘கொளுத்திய’ என்பது காரணப் பொருட்டாய் நின்ற இறந்த காலப் பெயரெச்சமாம்.  ‘கொளுத்திய சுடலை’ எனப் பாடங்கொள்வாருமுளர்; ‘எரித்து அந்தச் சுடலை’ எனப் பொருள் கொள்வர்.  அடலை-சாம்பல்.  ‘அடலை வெண்பலி சாம்பலாகும்’ என்பது பிங்கலம்.  மேவியே-ஏ, இசைநிறை.

    சர்வசங்காரகாலத்தில் சிவபெருமான்கொள்ளும் திருவுருவம் அனற்பிழம்பாத லால் ‘ கனல் கொளுத்திய ’ என்றார்.  உலகம் ஏழையும் என்பதை மேல் உலகம் ஏழையும் கீழ் உலகம் ஏழையும் எனக் கொள்க.  அம்பலமாவது பொது இடம்.  போற்றி போற்றி என்பது உவகைபற்றிவந்த அடுக்கு.  யாவுமழிந்த சங்காரகாலத்தில் இறைவன் திருநடத்தைக் காண்பார் உமாதேவியேயாதலால் ‘ அம்மைகாண ’ என்றார்.

(93)

94. விமல ! போற்றி. நின் பெருமை நாரணன்
        விரிஞ்சன் ஆதியோர் அறிய கிற்றிலா

    அமல ! போற்றிநான் அறியும் வண்ணம்முன்
        அறிவு தந்தருள் அறிவ ! போற்றி. தண்
    கமல வாவிசூழ் கருவை மாநகர்க்
        களவின் நீழல்வாழ் கால காலனே !
    இமய மால்வரைக் குமரி ஒப்பனைக் (கு)
        இனிய காதல ! போற்றி. எந்தையே !