பக்கம் எண் :

110

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

95. எந்தை யாயினாய் ! குரவன் ஆயினாய் !
        இறைவன் ஆயினாய் ! போற்றி. என்மனப்
    பந்தம் ஆயினாய் ! வீடும் ஆயினாய் !
        பரமும் ஆயினாய் ! போற்றி.  தென்புலச்
    சந்த மால்வரைத் தமிழ்மு னிக்கு(உ)மை
        தனைம ணந்தமெய்க் கோலம் காட்டினாய் !
    சுந்த ரப்புயத் தழகு போற்றி.நற்
        சோதி ! பால்வணத் தாதி ! போற்றியே.

    எனக்குத் தந்தை ஆனவனே ! (எனக்கு) ஆசிரியன் ஆனவனே ! (எனக்குத்) தலைவன் ஆனவனே ! வணக்கம்.  என் மனத்துக்குப் பற்றுக்கோ டானவனே ! (மனப்பற்றற்ற) முத்தியும் ஆனவனே ! (பற்றும் முத்தியுமான அவ்விரண்டையும் தரும்) மேலோனும் ஆனவனே ! வணக்கம்.  தென்திசையில் உள்ள சந்தனமரம் (செறிந்த) பெரிய (பொதிய) மலையில் அமர்ந்த தமிழ்முனிவராகிய அகத்தியருக்கு உமாதேவியைத் திருமணஞ் செய்தருளிய (உனது) உண்மைத் திருக்கோலத்தைக் காட்டியருளினவனே ! (உனது) திருப்புயங்களின் அழகு புகழப்படுவதாக. நல்ல சோதியே !  பால்வண்ணனான முதல்வனே ! வணக்கம்.

    குரவன்-ஆசிரியன்; ‘அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்’-இவ்வைவரும் ஐங்குரவர் எனப்படுவர் ; குரவராவார் வழிபாடு பெறத்தக்க பெரியோர்; இச் சொல் ஆண்பாலீற்றதாய் வருமிடத்து ஆசிரியனையும், பலர்பால் ஈற்றதாய் (ஐந்து என்னும் எண்ணடைபெறாது) வருமிடத்துத் தாய்தந்தையரையும் குறித்தல் பெரும்பான்மையான வழக்கு ; ‘ குரவனை வணங்கக் கூசிநின்றோனும் ’ ‘குரவர்தாம் இயைந்து கொடுத்திலராயின் ’ என்பன எடுத்துக்காட்டு.  பந்தம்-பற்று ; வீடு-முத்தி (பற்றுக்கு மறுதலை); பரம்-மேலானது.  ‘ பற்றாயதன்றி அப் பற்றுக்கு மறுதலையுமாகி