பக்கம் எண் :

114

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

98. தேவ னே!பிறர்க் கடிமை யுற்றிலேன் ;
        சிந்தை நின்வசம் தந்த தன்றியும்

    நாவி னால்தினம் பரவி வாழ்த்துவேன் ;
        நாளும் என்குறை தீர்ப்ப தார்கொலோ ?
    காவல் மூவரண் கனல்கொ ளுத்திடக்
        கருணை செய்திடும் கடவுள்! போற்றி.யான்
    பாவ காரியே எனினும் என்னைநீ
        பாது காப்பதுன் பண்ப தாகுமே.

    காவல் பொருந்திய மூன்று புரங்களை நெருப்புப் பற்றும்படி திருவருள்    புரிந்த கடவுளே ! வணக்கம்.  (தேவ) வேதனே ! (யான் நினக்கல்லால்) பிறருக்கு அடிமைப்பட்டில்லேன் ; (என்னுடைய) உள்ளத்தை உன்பாலே ஒப்புவித்ததோடு (என் நாவையும் உனக்கே தந்து அந்) நாவினால் நாள்தோறும் (உன் திருப் புகழைப் பேசித்) துதித்து வாழ்த்துகின்றேன் ; (அவ்வாறாக) ஒவ்வொரு நாளும் எனக்கு உண்டாகும் குறைகளை நீக்கி (என்னை ஆதரிப்பவர் நின்னையல்லால் வேறு) எவர் உளர் ?  (ஒருவருமில்லை.) யான் தீவினையேன் ஆனாலும் நி என்னை ஆதரிப்பது உன் (அருட்) குணத்துக்கு இயைந்ததேயாகும்.  (ஆதரித்தருள்.)

    வசம், ஏழாம் வேற்றுமை இடப்பொருள்தரும் ஒரு சொல்லுருபு.  அன்றியும் என்பதில் உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை. பரவல்-முன்னிலைப்படுத்திப் புகழ்தல்.  நாளும், என்பதில் உம்மை முற்றும்மை.  யாவர் என்னும் வினாவினைக் குறிப்பு ஆர் என மரீஇயது.  கொல், ஒ,-அசைநிலை.  காவல்மூவரண்-உருபும் பயனும் உடன்தொக்க தொகை.  பண்பது-பண்பு; அது பகுதிப்பொருள் விகுதி.

    ‘பிறர்க்கடிமை யுற்றிலேன்’ என்றதால் உனக்கடியனாயினேன் என்றா      ராயிற்று. எனவே காயத்தால் உனக்குத் தொண்டு