த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
115 |
செய்வேன் என்றாராம்;
‘ சிந்தை நின்வசம் தந்ததன்றியும் நாவினால் தினம் பரவி வாழ்த்துவேன் ’ என்றதால் மனமொழிகளால்
வழிபடுதல் கூறினாராம். ஆகவே மனமொழி மெய்களாற் செய்யக்கடவ மூவகை வழிபாடுகளும் பெறப்பட்டன.
பிறர்க்கடிமை யுற்றிலேன் என்றது பிறதெய்வங்களை வழிபடாமையைக் குறிக்கும். ‘உள்ளேன் பிறதெய்வம்
உன்னை யல்லால் எங்கள் உத்தமனே’ என்றார் பிறரும். அடிமையுறலும், சிந்தனை அவன் வசமாக்கலும்,
நாவால் வாழ்த்தலுமாக ஈண்டுக் கூறிய இவற்றோடு மேல் (63-ம் செய்யுளில்) ‘சிந்தனையுனக்குத்
தந்தேன்’ எனப்போந்த செய்யுளை ஒத்திட்டு நோக்குக.
(98)
99.
பண்ப யிற்றிவண்
டாடு கொன்றையம்
படலை மார்பனே !
போற்றி. அம்பிகை
கண்க ளித்திடத் தில்லை
மனிறினிற்
கடிந டம்புரி
கடவுள் ! போற்றி.பூஞ்
சண்ப கச்செழுங்
காவின் வேரிசூழ்
தண்க ளாவனத் தடிகள்
! போற்றி.மீ
விண்ப ரிப்பவன் தொழுத
நம்பனே !
வெள்ளை மேனியாய்
! போற்றி, போற்றியே.
இசை பாடிக்கொண்டு
வண்டுகள் சூழந்து பறக்கும் அழகிய கொன்றை மாலையினை அணிந்த திருமார்புடையவனே ! வணக்கம். உமாதேவி
கண்டு களிக்கும்படி தில்லைப் பொதுவில் சிறந்த நடனஞ் செய்தருளுகின்ற ஐயனே ! வணக்கம். அழகிய
சண்பகமரங்கள் நிறைந்த வளமுடைய சோலையினின்று வரும் வாசம் சூழ்ந்து (கமழும்) குளிர்ந்த களாவனத்தில்
எழுந்தருளிய அடிகளே ! வணக்கம். மேலுள்ள விண்ணுலகத்தைக் காப்பவன் (ஆன இந்திரன்) வணங்கிய
நம்பனே! வெண்(ணீறு பூசியதிரு) மேனியனே! வணக்கம், வணக்கம்.
|