பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

25

கிக் கண்களினின்றும் ஆனந்தபாஷ்பஞ் சிந்தவும் ‘திருக்கருவையி லெழுந்தருளிய பெருமானே ! எல்லாப் பொருளையுங் கடந்து நின்றவனே!’ என்று எனது நாத் துதிக்கவும் புண்ணியஞ் செய்தேன். இந்தப் பெரிய செல்வம் நிலவுலகத்தில் அடைவார் (வேறு) எவர்? (எவரும் பெறலரிது).

    மகுடம்-கிரீடம். இறைஞ்சும்-வணங்கும். விரை-வாசனை. சே அடி-செவ்விய அடி. மிசை-மேல். உள் நிறை காதல் அன்பு-உள்ளம் நிறைவுற்ற காதலாலும் அன்பாலும். பேறு-செல்வம்.

    விண்ணவர் மகுடகோடி-மகுடகோடி விண்ணவர் என இயைத்துப் பொருள் கொள்க.

(18)

19.  பெறுவது நினது திருவடிக் கமலம்;
        பேசுவ துன்திரு நாமம் ;
    உறுவது நினது திருவுரு வெளியாம் ;
        உணர்யாஙன் அருள்: அலா துண்டோ?
    மறுவறு சிறப்பின் மாசிலா மணியே !
        வரதனே ! சிவபெரு மானே !
    குறுமுனி பரவக் களாநிழ லமர்ந்த
        கொடிமதிற் கருவையா திபனே !

    குற்றமற்ற சிறப்பினையுடைய கழுவிய மாணிக்கம் (போல்பவனே)! (அடியார்களுக்கு வேண்டிய) வரத்தைக் கொடுப்பவனே ! சிவபிரானே ! அகத்தியர் வணங்கக் கொடி கட்டிய மதில் சூழ்ந்த திருக்கருவைப்பதியில் திருக்களா நிழலின்கீழ் எழுந்தருளிய இறைவனே ! (அடியேன் சரணமாகப்) பெறுவது உனது திருவடியாகிய தாமரையையே; நான் (புகழ்ந்து) பேசுவது உனது திருநாமத்தையே ; நான் பிறவிமுடிவில் அடைவது உனது திருவுரு