பக்கம் எண் :

26

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

வாகிய சிதாகாசத்தையே ; யானறிவது உனது திருவருளையே; (இவையே) யல்லாமல் (பெறுவது முதலாயின) வேறுண்டோ ? (இல்லை).

    கமலம்-தாமரை. உறுவது-பொருந்துவது. மறு அறு-குற்றம் இல்லாத. மாசு இலா-அழுக்கு இல்லாத. வரதன்-வரம் அளிப்பவன். குறுமுனி-குறுகிய வடிவுடைய முனிவர்-அகத்தியர். பரவ-வணங்க. ஆதிபன்-தவைன்.

குற்றமற்ற மணி சிறப்புடையது. ஆயினும் தொளைக்கப் படுதல் முதலிய குறைகள் அதற்கு உளவாதலின், அவ்வகைக் குறைகள் அற்ற சிறப்புடைய மணி என்பது தோன்ற ‘மறுவறு சிறப்பின் மாசிலாமணியே’ என்றார். ‘தோளாமணி’ ‘கோவாமணி’ ‘மலையிடைப் பிறவாமணி’ என வருவன காண்க.

(19)

20. ஆதவன் மதிபார் அனல்வெளி புனல்கால்
        அருமறை எச்சனென் றெட்டுப்
    பேதமாம் உருவாய் அருவமாய் நிறைந்த
        பெற்றியால் உற்றுநான் உன்னை
    ஏதினால் உணர்வேன்! உணருமா றருரளாய்;
        இளநிலாப் பசுங்கொழுந் தணிந்த
    சோதியே ! கருவை ஒப்பனை களபத்
        துணைமுலை தழுவுகா தலனே !

    குளிர்ச்சி பொருந்திய முற்றாத இளஞ் சந்திரனைச் (சடாமுடியில்) அணிந்த (ஞானப்) பிரகாச வடிவாயுள்ளவனே ! திருக்கருவைப்பதியி லெழுந்தருளிய, உமையம்மையின் வாசனைச் சாந்தை பணிந்த இரண்டு தனங்களையும் தழுவும் அன்புடையவனே ! சூரியனும், சந்திரனும், பிருதிவியும், தேயுவும், ஆகாயமும், அப்புவும், வாயுவும் அரியவேதங்கள் கூறும் ஆன்மாவும் என்று சொல்லப்பட்ட எட்டுவகைப் பட்ட திருவுருவமாகியும் அருவமாகியும் (நீ)