பக்கம் எண் :

New Page 1

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

47

    ‘பரம் எனக்கு’ என்பதற்கு ‘எனக்கு (நீயே) பரம் (பொருள்)’ எனப் பொருள் கொண்டு ‘தருதல் உனது கடன்’ என்பதனை இசையெச்சமாக்கினும் அமையும். ‘திருவடிச் செல்வம்’ என்பதைத் திருவடிகளையுடைய செல்வம் என வேற்றுமைத் தொகையாக்கியும் ஈற்றேகாரத்துக்கு விளிப்பொருள் கொண்டும் உரைகூறிப் ‘பரம் தருவையோ’ என இயைத்து மேலான மோக்ஷ பதவியைத் தருவையோ           என்பதுமுண்டு.

(38)

39.  செல்வம் ஈயும்; சிறப்பும் அளித்துளத்(து)
        அல்லல் தீர்க்கும்; அறிவை உதவிடும்;
    கல்வி நல்கும்; கதிதரும்: பொற்கிரி
        வல்வி லான்கள ஈசனை வாழ்த்தவே.

    பொன்மலையாகிய மேருவை வலியவில்லாக உடையவனாகிய களாநிழலில்    எழுந்தருளிய இறைவனை, ஒருவன் வாழ்த்த, (அவ்வாழ்த்துதல் அவனுக்கு)  இம்மை யில் நுகர்தற்குரிய செல்வத்தைத் தரும் ; (அரசர் முதலாயினார் உபசரிக்கத்தக்க)  நன்கு மதிப்பையுந் தந்து, மனத்திலுள்ள கவலையையுந் தீர்க்கும்; உணர்ச்சியையுந் தரும்; அவ்வுணர்ச்சிக்குக் காரணமாகிய கல்வியையுந் தரும்; மறுமையில் மோக்ஷத்தையுந் தரும்.

    அல்லல்-துன்பம். பொன்கிரி-பொன்மலை-மேருமலை.

    ‘செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும்’ என்று திருவாதவூரடிகள் அருளியாங்கு அல்லலைத் தருவது செல்வமாயினும் உன்னை வாழ்த்துதலாற் பெற்ற செல்வமாதலால் அது சிறப்பையே தரும் ; அல்லல் ஒருகால் உண்டாயினும் உன்னை வாழ்த்துதலே அவ்வல்லலைத் தீர்க்குமென்பார் ‘செல்வமீயுஞ் சிறப்பும் அளித்துளத் தல்லல் தீர்க்கும்’ என்றார். பொன்மலையினையே ஓர் ஆயுதமாகக் கொண்ட பெருஞ்செல்வனா தலால், தன்னைவாழ்த்தினார்க்குச் செல்வமும் செல்வத்தாற் பெறப்படும் சிறப்பும் அளித்தல் எளிதென்பதும்; மலையினையே வில்லாக வளைத்தவனாதலால்