பக்கம் எண் :

46

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

தருளிய ஈசனும், வெள்ளிய மயிர் பரவிய பெரிய இடபத்தை வாகனமாகவுடையவனும், பரமேட்டியுமாகியவன்.

    பாய-பரவிய. ‘ பாயிருள் ’ என வருவது காண்க. பரமேட்டி-சிவபெருமான். ‘பாயுமால்விடை’ என்பதும் பாடம்.

சுடர்விளக்கேற்றிய என்றதால், அவன் ஆண்டருளி ஏற்றுவதற்கு முன்னே ஞானவிளக்கம் பாசத்தால் மூடப்பட்டு சுடர்விட்டெரியாது கிடந்ததென்பது பெறப்படும். தூயஞானம் என்றது பதிஞானத்தை.

(37)

38. பரம் எனக்குனை யன்றியோர் பற்றிலேன்.
        சரம முற்றிய போதில் தருவையோ,
    கருவை நிற்கும் களாமுத லே!மறைச்
        சிரமி ருக்குந் திருவடிச் செல்வமே.

    திருக்கருவையிலுள்ள திருக்களாநிழலில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வனே! (யான்)உன்னையன்றி ஒரு பற்றுக் கோடில்லேன். (ஆதலால்) எனக்குச் சரமதிசை   நேர்ந்த காலத்தில், வேதமுடியிலிருக்கும் உனது திருவடியாகிய அருட் செல்வத்தைத் தந்தருள் வாயோ? (தந்தருளுதல் உனது) பாரம்.

    பரம்-பாரம். சரமம்-அந்திய காலம்.

    ஒருவன்பால் ஒன்றை இரப்போன், ‘ நின்னையே நம்பி வந்தேன். நின்னையன்றி எனக்கு வேறு கதியில்லை ’ என அவன் தனக்கின்றியமையாமையினையும் தனக்கு ஆதரவுவேறற்ற தன்மையினையும் உரைத்துப் பின்னர் வேண்டிய பொருளைக்   கேட்டல் இயல்பாதலால் ‘ பரம். எனக்கு உனையன்றியோர் பற்றிலை ’ என்பதை முன்னர்க் கூறித் தாம் வேண்டிய பொருளாகிய திருவடிச் செல்வத்தை இறுதியிற் கூறினார்.

    ‘களாமுதலே, (யான்) பற்றிலேன்; எனக்குத் திருவடிச் செல்வம் தருவையோ? (தருதல் உனது) பரம்’ என இயைவது நேர்.