த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
49 |
புலால் நாற்றமுடைய பிரமகபாலத்தில் பலி ஏற்ற முகலிங்கநாதனே ! கலை ஒடுங்கிய இளஞ்சந்திரனைச் சூடிய
சடையோடுகூடிய திருமுடியை உடையவனே ! (தாம் விரும்பியன முன்னமே) கிடைத்துவிட்ட பொருளாகக்
கையில் இருக்க (அதை அறியாமல். விரும்பியன) கிடைக்கவில்லை (என்று கருதி) மனந்தளர்ந்து
வருந்துகிறவர்களைப்போல, (என்னை இந்த யாக்கையிற்) படைத்த உன்னுடைய அருளைப் பெற்றும்
பெறாதவர்போல வருந்தா நின்றேன். (உன்னுடைய மாயம் இருந்தபடி இருவானால்) உன்னுடைய மாயாசத்தி
யான் உணரும் தம்மையதோ ? (அன்று.)
பரிவு-துன்பம்.
முடை-நாற்றம். முகிழ்த்த-குவிந்த. நிலா-சந்திரன்,
‘முகிழ்த்த சடை’ என இயைத்துக் கட்டிய சடை எனப் பொருள்கூறலும் ஒன்று.
ஆணவத்தின்
வலியைக்கெடுத்து ஆன்மாலை இறைவனடியிற் சேர்த்தற்குக் கருவியாக இறைவனால் கொடுக்கப்பட்டதே
இந்த யாக்கையாதலால், இந்த யாக்கையைப் பெற்றதொன்றுமே நினக்கு என்மாட்டுள்ள
அருட்பெருக்கைப் புலப்படுத்தாநிற்க, நினது அருளைப் பெறாதவன்போல உளம்வருந்தல் என்னோ
என்பார் ‘ படைத்தநின தருள்பெற்றும் பெற்றிலர்போற் பரிவுற்றேன்’ என்றார். தூயவனாகிய நீ
முடைத்தலை கைக்கொள்வதும், சர்வேஸ்வரனாகிய நீ பலிகொள்வதும், நின் அருளை எனக்கு அளித்தமை
கண்கூடாகக் கிடக்கவும் யான் அதை அறியாமல் வருந்தச் செய்வதும், யாரானும் உணரத்தகாத
பெருமாயமா யிராநின்றன என்பார், ‘நின்மாயம் யானுணரும் தரத்ததோ’ என்றார்.
(41)
|