த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
5 |
யான்) இரவும் பகலும் மறவா திருக்க வரமும் கொடுத்தருளினை.
‘உனது பேரருளை என்னென்பது
!’ என இசை யெச்சம் கொள்க.
அவலம் - கேடு. நேயம்
- அருள். சீறு ஆடு அரவம் என்னும் மும்மொழிகள் புணர்ந்து சீறாடரவம் என்றாயின. ‘ கிடப்பேனுக்கு
’ எனற்பாலது ‘ கிடப்பேனை ’ என்றாயது உருபுமயக்கம்.
உடல் உள்ளளவும்
உடனிருந்து உடலையும் உணர்வையும் அழிக்கும் இயல்பிற்றாதலால் காமத்தை ‘ஆறாக் கொடிய கனல்’
என்றார். ஐவர் என்னும் சொல் காமத்தீயை மூட்டுவதாகிய குறிப்பால், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
என்னும் ஐம்புலன்களை உணர்த்தியது. ‘கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் - ஒண்டொடி
கண்ணே யுள’ வாதலால், ஐம்புலனும் ஒருங்கே நின்று மூட்டுதற் கிடமாவது காமமேயாதல் உணர்க.
‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்றாற்போல ‘உனதருளாலே உள்தாள்வழுத்த மறவாதிருக்கின்றேன்’
என்பார், ‘மாறாநேயத் திரவுபகல் மறவாதிருக்க வரம் அளித்தாய்’ என்றார்.
நினைவு தந்ததேயன்றி
அதை மறவாதிருக்க வரமும் தந்தாய் என இறந்தது தழீஇய எச்சஉம்மை வருவித்துக் கொள்க.
(2)
3.
சுடரே ! வலியத்
தடுத்தாண்ட
துணையே ! பிறவித்
தொடுகுழிவீழ்
இடரே யகலக் களாநீழல்
இருந்த
கோவே ! எம்பெருமான் !
உடலே ஓம்பித் திரியும்எனை
உன்னை நினைக்கப்
பணித்த அருட்
கடலே! உனையன்
றொருதெய்வம்
காண வழுத்தக்
கடவேனோ ?
|