த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
51 |
இது திருவருட்பயனில், ‘
தாடலைபோற் கூடியவை தானிகழா
வேற்றின்பக்-கூடலைநீ ஏகமெனக் கொள்’ என உமாபதி சிவாசாரியார் திருவாய்மலர்ந்தருளிய
அருமைத் திருவாக்கால் துணியப்படும். இம் முத்தி நிலையே சாயுச்சியம் எனப்படும். அந்நிலையி லும்
சிவபெருமான் ஆண்டானும் ஆன்மா அடிமையுமாகும் பெற்றி மாறுபடுமாறில்லை என்பது சித்தாந்த நூற்றுணிபாதலால்,
சிவபெருமானது இன்புருவத் தாளை ஆன்மா வாகிய தலை சேரும் என்பது போதரத் தாள் தலை என்னும்
இருசொற்களின் புணர்ச்சி நிலை உதாரணமாகக் காட்டப்பட்டது. துணிவுபற்றி ‘இரண்டற்றேன்’ என
இறந்த காலத்தாற் கூறினார். இதற்கு இவ்வாறன்றியான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும்
நீங்கப் பெற்றேன் எனப் பொருள் கூறுவாருமுளர்.
‘புகழோங்க’ ‘பணராசி’ என்பவும் பாடம்.
(42)
43.
பழமையாம் வாதனையில்
படிந்தமனப்
பந்தத்தின்
விழைவினால்
தலைமயங்கி
வேறுவே
றுருவெடுத்துச்
சுழல்குயவன் திகிரியைப்போல்
பவக்கடலிற்
சுழல்வேனோ !
மழவிடையாய்
! பால்வண்ணா !
வானவர்தம்
கோமானே !
இளமை தங்கிய இடப வாகனனே
! பால்வண்ண நாதனே ! தேவர்களுக்கு இறைவனே! தொன்றுதொட்டுள்ள (ஆணவமலத்) துன்பத்தில் அழுந்திய
மனப்பற்றால் விளைந்த ஆசையால் அறிவு மயங்கி வெவ்வேறு உருக்கொண்டு பிறந்து பிறந்து, குயவன்
(சுழற்றச்) சுழலும் சக்கரத்தைப்போலப் பிறவிக் கடலிற் சுழலக் கடவேனோ? (சுழலாது பிறப்பறுத்துத்
திருவருள் செய்).
|