த
54 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
சுருதி-வேதம்.
புண்டரிகம்-தாமரை. அண்டர்பிரான்-தேவர்தலைவன். ஆழி- சக்கரம். ஞாலம்-உலகம். தனி-ஒப்பற்ற.
இந்திரன் முதலியோர்
சிவபெருமான் திருவடியைப் போற்றிப் பேறுபெற்றனர் என்பதைப் பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற்
புராணத்துள்,
‘வண்டுளருந் தண்டுழாய்
மாயோன் இறுமாப்பும்
புண்டரிகப்
போதுறையும் புத்தேன் இறுமாப்பும்
அண்டர்தொழ
வாழுன் இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த
பேறென் றுணர்ந்திலையால்’
எனவரும் செய்யுளாலும்
அறியலாகும். தேவலோகங்களினும் இவ்வுலகம் தாழ்ந்ததாயி னும், முத்திக்குச் சாதனமான மக்கள்
யாக்கை நிலவுவதற்கு இடமாவது இவ்வுலகமே யாதலால் ‘தனி ஞாலம்’ என்றார். ‘திணிஞாலம்’ எனப்
பாடங்கொள்வாரும் உளர். ஆழியான், கடலிற் றுயில்வோனுமாம்.
(45)
46.
வழுத்திடுவேன் நாவார
;
மலரிடுவேன்
கரங்கொண்டு ;
தொழத்தகுவேன்
முடிதாழ்த்தி ;
சூழ்வருவேன்
துணைரத்தாளால்;
அழுத்திடுவேன் மனத்துன்னை
;
அகம்புறமொன்
றாயுருகிப்
பழித்திடுவேன்
அருள்கனிய :
பால்வண்ணா
! நம்பரனே !
பால்வண்ணனே! நமது
பரமனே! உனது திருவருள் சுரக்க, எனது நாத் தெவிட்டத் துதிப்பேன் ; எனது கையால் மலர்கொண்டு
அருச்சிப்பேன் ; தலையை வளைத்து வணங்குவேன் ; எனது இரண்டு கால்களால் பிரதக்ஷிணஞ் செய்வேன் ;
மனத்தில் உன்னைத் தியானிப்பேன்; அகமும் புறமும் ஒருசேரவுருகித் துதிப்பேன்.
|