பக்கம் எண் :

56

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

நீ இனியும் தாமதியாமல் என்னைக் காக்க உன் திருவருட்புணையை எனக்கு     அளித்தருள் என்பார் ‘புரக்க இரக்க மின்னந்தோன்றாதா’ என்றார். ‘கவிழ்ந்து’ என்பது பாடமாயின் கவிழ என்னும் வினையெச்சத் திரிபாகக் கொள்க. நடுக் கடல்-கடல் நடு, இலக்கணப் போலி.

(47)

48. தோன்றியபோ துடன்தோன்றித்
தோன்றாது மறைத்தென்னை
    ஆன்றசெழுஞ் செம்பிலுறை
களிம்புபோல் அகலாமல்
    ஊன்றுமலத் துகளகற்றி
        உன் அருளும் பெறுவேனோ ?
    மூன்றுலகுந் தொழுதேத்தும்
முகலிங்கா ! முதற்பொருளே !

    மேல் கீழ் நடுவான) மூன்றுலகமும் வணங்கித்துதிக்கும் முகலிங்கனே! அனைத்தினுக்கும் முதலாயுள்ளவனே! யான் தோன்றியபோது, பொருந்திய செழுமையான செம்பில் களிம்புபோல், என்னுடன் தோன்றி, யான்தோன்றாமல் என்னை மறைத்து (என்னைவிட்டு) நீங்காமல் அழுந்திய மலக்குற்றத்தை யொழித்து, உனது திருவருளும் பெற்றுய்வேனோ? (யானறியேன்.)

    துகள்-குற்றம். செம்பிற் களிம்புபோல் மலம் ஆன்மாவை அனாதியே பற்றி யுள்ளதென்பது,

நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும்
    சொல்லிற் புதிதன்று தொன்மையே-வல்லி
    மலகன்ம மன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள்
    அலர்சோகம் செய்கமலத் தாம்’

எனவருந் திருவாக்காற் பெறப்படும்.

(48)