த
8 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
நாள்தோறும் அழுந்திக்கிடக்கும்
என்னையும் ஒரு பொருளாகக் கருதி ஆட்கொண்ட ஞானவடிவனே! தமிழ் வழங்கும் திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும்
இறைவனே! சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரிபவனே ! (உன் பெருங்கருணைத் திறத்தை என்னென்பேன்
!)
வேனிற்காலம் மன்மதனுக்கு
உரியதாதல்பற்றி, அவற்கு ‘வேனிலாளி’ ‘வேனிலான்’ எனப் பெயர் வழங்கும். சிலை-வில். வேள்-மன்மதன்.
தொடுதல்-எய்தல். கணை-அம்பு. கவற்சி-கவலை-மனச்சுழற்சி ; கவி, கவர், கவண் முதலிய
மொழிகளை இதனோடு ஒட்டி நோக்குக. பானல்-நீலோற்பலம்.
காமம் முதலிய இழிகுண
வசத்தால் உண்டாம் துயராதலின் 'ஈனத் துயரக் கடல்’ என்றார். ‘எனையும்’ என்றதில் உம்மை இழிவு
குறிப்பது.
(4)
5.
நடித்தேன்
பொய்க்கூ(டு) எடுத்(து), அவமே
நன்னாள்
கழிய ; இந்நாளில்
படித்தேன் உனது
திருநாமம் ;
பண்டை
வினையின் பற்றறுத்தேன் ;
பிடித்தேன் பிறவிக்
கடல்நீந்தப்
பெரிய
புணையா உனதடியை ;
முடித்தேன் உள்ளத்(து)
எண்ணமெல்லாம் :
கருவை வாழும் முன்னோனே !
திருக்கருவையில்
எழுந்தருளியிருக்கும் முதல்வனே, பொய்யான இச்சரீரத்தை எடுத்து நல்ல நாட்கள் யாவும் வீணே கழிய
(மெய்ந்நிலையில் நிற்காது, பொய்யாக) நடித்து ஒழித்தேன், (இளமை கழிந்த) இக் காலத்தில்
தான் உனது திருநாமங்களை ஓதினேன் ; (அதனால்) எனது பழவினையின் தொடர்பை விலக்கினேன் ; பிறவியாகிய
|