பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

7

தன்மீது சரிந்து விழுந்து தன்னை ஆணவம் என்னும் அந்தகாரத் துக்குள்ளாக்கும். ஆக்க, அவ்வந்தகாரத்தால் மீளும் வழி அறியாது துன்புற்றுத் தடுமாறும். அவ்வாறு தடுமாறுவதைத் தடுப்பதற்கும், ஒருகால் தவறி வீழினும் வெளியெடுப்பதற்கும் தமது பேரருட்பெருக்கத்தால் அருகு வந்திருக்கும் பெற்றிமை நோக்கி, ‘இடரே அகலக் களாநீழல் இருந்த கோவே’ என்றார்.

    ஓம்புதல்-காப்பாற்றுதல். புறத்தே சென்று ஒழுகிய என் உணர்வை அகத்தே மடங்கிச் செறியுமாறு செய்தனை என்பார் ‘உடலே ஓம்பித் திரியும்எனை உன்னை நினைக்கப் பணித்தாய்’ என்றார்.

    அன்பாறாகப் பத்தர்கள் வந்து தன்னொடு கலந்து தன்னில் ஒடுங்குவதற் கிடமாதல் கருதியும், அளவிடுதற்காகப் பெருமையுடைத்தாதல் பற்றியும் ‘அருட்கடல்’ என்றார்.

    ‘அன்றி’ என்னும் வினையெச்சத்தின் இகரம் உகரமாகத் திரிந்தது செய்யுள்     விகாரம்.                                        

(3)

4. வேனிற் சிலைவேள் தொடுகணைக்கும்
விளங்கும் மகளிர் உளம்கவற்றும்
    பானற் கொடிய விழிவலைக்கும்
        பற்றாய் வருந்தி, அனுதினமும்
    ஈனத் துயரக் கடல் அழுந்தும்
        எனையும் பொருளா அடிமைகொண்ட
    ஞானத் துருவே! தமிழ்க்கருவை
        நம்பா ! பொதுவில் நடித்தோனே !

    வேனிற் காலத்துக்கும் (கரும்பு) வில்லுக்கும் உரியவனான மன்மதன் எய்யும் (காமக்) கணைக்கும், (அழகால்) விளங்கும் மங்கையர்கள் மனத்தைச் சுழற்றித் (தம் வசப்படுத்தவல்ல) நீலோற்பலம்போன்ற கொடிய கண்களாகிய வலைக்கும் இலக்காகி வருந்தி, இழிவாகிய துன்பக் கடலில்