பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

83

74. நேர்ந்த நெஞ்சமே! நெடிது வாடிநீ
        சோர்ந்த துன்பமுந் துயரும் போக்குவான்

    வார்ந்த செஞ்சடைக் கருவை வானவன்
        ஆர்ந்த பேரருள் அருவி யாடவே.

    (உனது வாட்டத்தையும் சோர்வையும் போக்கும்படி) வேண்டிய மனமே!    நீண்ட சிவந்த சடையையுடைய இறைவனது வற்றாத பெரிய அருளாகிய அருவி யில் நீராட, நீ மிகவும் வாடுதற்கும் சோர்தற்கும் காரணமான துன்பத்தையும் வருத்தத்தையும் அவன்போக்கி அருள்வான்.  (ஆதலால் ஆடுக.)

    நீ நெடிது வாடிச்சோர்ந்த என்க.  ‘வாடிச் சோர்ந்த’ என்பதனை ‘வாடிச் சோர்வதற்குக் காரணமான’ என ‘நோய் தீர்ந்த மருந்து’ என்பதுபோற் கொள்க.  ‘நெடிதுவாடிச் சோர்ந்த நீ’ எனினும் அமையும்; இப்பொருட்கு ‘உன்வாட்டத்துக் கும் சோர்வுக்கும் காரணமான’ என எச்சங்கொள்க.  துன்பமாவது தான் பெற்ற தொன்றை யிழந்த காலத்தும், முயன்ற தொருபொருள் கிட்டாத காலத்துந் தோன்றுவது.  அதனைத் துன்பமென்னும் பெயர்க் காரணத்தால் உணர்க.  துன்(=அடை) பகுதி; துன்னுதலென்னும் பொருட்டு.  துயரமாவது இகத்திற்குரிய சாதனங்களைப் பெறாமையால் என்று முள்ளது.  துய்=(அனுபவி) பகுதி; துய்த்தல் என்னும் பொருட்டு.  துன்பத்துக்கும் துயரத்துக்கும் இதனால் வேறுபாடறிக.

(74)

75. ஆடு மட்கலத் திகிரி யொத்தலைந்
        தோடு நெஞ்சமுங் கவலை யோர்ந்துனை
    நாடு மோதமிழ்க் கருவை நம்பனே!
        ஏடு சேர்மலர்க் களவில் ஈசனே !

    முத்தமிழ் வழங்கும் திருக்கருவையி லெழுந்தருளிய இறைவனே!  இதழ் செறிந்த மலர்களையுடைய திருக்களாவின் நீழலில் எழுந்தருளிய பெருமானே ! மட்கலத்தை