த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
85 |
முமே பிறவியறுக்க வல்லனவாதலால்
அவையிரண்டும் இல்லேற்குப் ‘பிறப்பென்று மாயுமே’ என்றார்.
77.
பிறவி மாயவும்
அருள்பெ ருக்கவும்
துறவி யாய்வனம்
துன்னல் வேண்டுமோ?
இறைவன் எம்பிரான்
களவில் ஈசனென்(று)
அறையும் முன்னமே
அனைத்தும் எய்துமே.
(எப்பொருட்குந்)
தலைவனென்றும், எமது பெருமானென்றும், திருக்களா நீழலில் எழுந்தருளிய ஈசனென்றும், (அன்புடன்
ஒருமுறை) சொல்லுதற்கு முன்னமே, (முத்திப்பேறும் திருவருட்பேறும் முதலாய) எல்லா நன்மைகளும் வந்து
கைகூடும்; (ஆதலால்), அவனது திருவருள் பெருகச்செய்யவும், பிறப் பொழியவும், துறவறத்தை யுடையவனாய்க்
காட்டில் தவஞ்செய்ய ஒருவன் சொல்ல வேண்டுமோ ? (வேண்டா.)
துன்னல்-சேர்தல்.
அறைதல்-சொல்லுதல்.
திருவருளா லன்றிப்
பிறவி மாயுமாறில்லை யாதலின் ‘அருள் பெருக்கவும் பிறவி மாயவும்’ என முறைமாற்றிப்
பொருள்கொள்க. ‘ துறவியாய் வனம் துன்னல் வேண்டுமோ ’ என்றது, ஈசனடிக்கு அன்பின்றி இல்லமுதலாயவற்றைத்
துறந்து வனம் சேர்தலாற் பயனில்லை என்பது கருதி.
‘கான நாடு கலந்து
திரியிலென்
ஈன மின்றி
யிருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட
லொழிந்துவா னோக்கிலென்
ஞான னென்பவர்க்
கன்றிநன் கில்லையே’
என்றார் திருநாவுக்கரசு
சுவாமிகளும்.
அவனடிக்கு அன்பின்றித்
துறக்கும் துறவு புறத்துறவாகுமேயன்றி அகத்துறவாகாது. அவனடியைப்பற்றின் அவனருள் தோன்றி அதுவே
பிற பற்றுக்களை அறுத்துப் பிறவியை மாய்த்துப் பேரின்பப் பேற்றினை நல்கும். ஆதலின்,
‘ஈசனென்றறை
|