பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

31

விரும்பிய மயக்கத்தையுடையவனும், கொடியவஞ்சககுண முடையவனுமான எனது மனமென்னும் கருங்கல்லைக் கரையச்செய்து, (குருவுருக்கொண்டு) வெளிப்பட்டு வந்து, நினது பொன்போலும் அழகிய திருவடிக் கமலங்களை (எனது) தலையிற் சூட்டி, என்னை அடிமைகொண்ட இரக்கம் மிகுந்த உனது திருவருட்குணத்தை எடுத்துச் சொல்வதற்கு (வல்லார்) யாருளர்? (ஒருவருமிலர்.)

    புன்தொழில்-அற்பத் தொழில்கள் (செய்யும்). மாதரார்-விருப்பத்திற்கிடமானவர்-மகளிர்;  ‘மாதர் காதல்’ என்பது தொல்காப்பியம். வளம், ஈண்டுப் போகத்தைக் குறிக்கும். வேட்ட-விரும்பிய. களியன்-கள்ளுண்டவன்-மயக்க முடையவன். மிலைந்து-சூட்டி. அளி-இரக்கம்.

    சிற்றறிவும் சிறுதொழிலும் உடைமைபற்றி ‘எளியன்’ என்றார். காமம் கள்ளினும் மகிழ்செய்யும் என்பதுபற்றிக் ‘களியன்’ என்றார். ‘உள்ளக் களித்தலும் காண மகிழ்த லும்-கள்ளுக்கில் காமத்திற் குண்டு’ என்றார் நாயனாரும். செங்கல் செயற்கைக் கல் : கருங்கல் இயற்கைக்கல்; செங்கல்லினும் வலியது. வெளியில் வந்து என்றது கட்புலனாகக் குருவடிவில் வெளிப்பட்டு வருதலை; முன்னர் ‘ ஆண்டகுரவன் ஆவானை’ (எ) என்றதும் காண்க.             

(23)

24. அமரர் மாதவர் முனிவரர் திரண்டுநின்(று)
        அனுதினம் தொழுதேத்தும்
    தமர நூபுரப் பொற்சரண் ஏத்திடத்
        தமியனுக்(கு) அருள்செய்தான்,
    குமர னால்அருஞ் சூர்ப்பகை தடிந்தவன்,
        கொள்ளைவண் டினம்ஆர்க்கும்
    கமல வாவியும் பொங்கரும் சூழ்திருக்
        கருவைஎம் பெருமானே.

    (தனது இளையகுமாரனான) முருகக் கடவுளால் (எவரும் வெல்லுதற்கு) அரிய சூரபத்மாவாகிய பகைவனை