பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

19

13. அழிவிலாப் பொருளே! பழமறைக் கொழுந்தே!
        அலையெறி அமுதவா ரிதியே!
    ஒழிவிலா தருளுங் கற்பகக் கனியே!
        ஒப்பனை மைப்பரந் தெறிக்கும்
    விழியினா லுருக ஒருபுறம் அளித்த
        விமலனே! கருவையம் பரனே!
    இழிவிலாப் புணையாம் பிறவியங் கடனின்(று)
        ஏறநான் பெற்றதுன் பதமே.

    (எக்காலத்தும்) அழிதலில்லாத பொருளாயுள்ளவனே! தொன்றுதொட்டுள்ள வேதம் (விளங்குதற்கு முதற்காரணமான) கொழுந்தே! (அருளாகிய) அலைவீசும் (பேரானந்த மென்னும்) அமுதசாகரமே! (தன்னைச்சரணடைந்தோர்க்கு வேண்டியவற்றை) ஓய்வின்றித்தந்தருளும் கற்பகக்கனியே! ஒப்பனை (யென்னும் உமையம்மையாரது) மைபரவி ஒளிவீசும் கடைக்கட் பார்வையால் திருவுள முருக வாம் பாகத்தை யளித்தருளிய விமலனே! திருக்கருவையிலெழுந் தருளிய இறைவனே! (மீளவும் ஆழுதலில்லாமல்) பிறவியாகிய கடலினின்றும் நான் கரையேற, அடியேன் பெற்ற சிறந்த தெப்பமாவது, உனது திருவடியே.

    மறை-வேதம். வாரிதி-கடல். விமலன்-இயல்பாகவே மலபந்தத்தினின்று நீங்கியவன். இழிவு இலா-தாழ்வு இல்லாத-சிறந்த. புணை-தெப்பம்.

    சிவபெருமானையே பொருளாக உடையது வேதமாதலால் மறைக் கொழுந்து என்றார். கொழுந்து இலையாய் விரிவதுபோல் சிவபெருமானே வேதமாக விரிந்தார் என்பது கருத்து. இதற்கு இவ்வாறன்றி வேதம் என்னும் வித்தின் முளைத்த கொழுந்து என்று பொருளுரைப்பாருமுளர். அது பொருந்தாமை கண்டு கொள்க. கடல் தன்னகப்பட்ட பொருள்களை அலையால் மொத்தி