பக்கம் எண் :

24

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

என்பது புராண வரலாறு. ஆதலின், ‘நாரணன் அறியாத் திருவுரு’ என்பதற்கு ‘நாரணன் அறியாத் திருவடியோடு கூடிய உரு’ எனப் பொருள் கொள்க. ‘திருமாலும் பன்றியாய்ச் சென்றிடந்தும் காண்பரிய-திருவடிக்கே சென்றூதாய்க் கோத்தும்பீ’ என்றார் திருவாதவூரடி களும். நாராயணன் என்பது வடசொல். நீரில் வசிப்போராதலால் திருமால் நாராயணன் எனப்படுவர் என்பர். (நாரம்-நீர்; அயனம்-இடம்.) இதற்கு இப் பொருள்படப் பத முடிபு கூறுவதை மறுத்து ‘உண்மையால் நோக்குங்கால் நாராயணன் என்பது அவயவப் பொருள் பற்றிக் காரணக்குறியாய் நின்றே பரமசிவனை உணர்த்தும் என்பது காட்டுதும் ’ என எடுத்துக்கொண்டு ‘ நரருடைய தொகுதி நாரம் ’ என்பது முதலாக, வடமொழி வியாகரண நெறிபற்றிப் பதமுடிபினை இனிது விளக்கி ‘நாராயணன் என ஒருமொழியாய்,   உயிர்த் தொகையை ஒத்து நிற்பன் என்னும் பொருட்டாய்க் காரணக் குறியாயவாறு காண்க’ என ஆசிரியர் சிவஞான சுவாமிகள் சி வஞானபோத மாபாடியத்துட் காட்டினார் ; கண்டு கொள்க.

(17)

18. விண்ணவர் மகுட கோடிவீழ்க் திறைஞ்சும்
        விரைமலர்ச் சேவடி மிசையே
    உண்ணிறை காத லன்புநின் றுருக
        உலையிடு மெழுகென உருகிக்
    கண்ணில்நீர் வாரக் கருவையம் பரனே!
        கடவுளே! என்றெடுத் தேத்தப்
    புண்ணியம் புரிந்தேன் இப்பெரும் பேறு
        பூதலத் தெவர்பெறு வாரே.

    (மணி) மகுடங்களை யணிந்த அளவிறந்த தேவர்கள் (தண்டாகாரமாக) வீழ்ந்து வணங்கும் வாசமிக்க தாமரை மலரை யொத்த செவ்விய திருவடிகளின்மேல், எனதுள்ள மானது, நிறைந்த ஆசையோடும் அன்போடும் நிலைபெற்று இளகக் கொல்லுலையில் வைத்த மெழுகைப்போல உரு