த
32 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
வேரோடு அறுத்தவனும்,
வண்டின் கூட்டங்கள் தேனைக் கொள்ளை கொண்டிசைக்கும் தாமரைகளையுடைய தடாகங்களும் சோலைகளும்
சூழ்ந்த திருக்கருவைப்பதியில் எழுந்தருளிய எமது பெருமானுமாகிய இறைவன், தேவர்களும் பெரிய
தவத்தை யுடையவரும் முனி சிரேஷ்டர்களும் கூடி நின்று எந்நாளும் துதித்து வணங்கும்
போரொலிவாய்ந்த சிலம்பினை யணிந்த பொன்போலும் அரிய திருவடிகளைத்
துதிக்க, (மக்களிற்
கடைப்பட்ட) தனியேனாகிய எனக்கும் அருள் செய்தான்.
அமரர்-தேவர்.
மாதவர்-தவத்தில் மிகுந்த மக்கள். முனிவரர்-தேவர் படைக்கப் படுதற்குமுன் பிரமனாற்
படைக்கப்பட்டவர். தமரம்-பேரொலி. நூபுரம்-சிலம்பு; சிவபெருமானுக்குச் சிலம்பாவது வேதம்.
சூர்-சூரபத்மா. தடிந்தவன்-கொன்றவன். கொள்ளை-மிகுதியாகக் கொள்ளுதல். இனம்-கூட்டம்.
ஆர்க்கும்-சப்திக்கும். பொங்கர்-சோலை.
‘அடுஞ் சூர்ப்பகை’ என்பதும் பாடம். அடும்-(பலரையும்) அழிக்கும்.
அமரர்
முதலியோரால் வணங்கப்படும் திருவடியின் பெருமை தோன்றப் ‘பொற்சரண்’ என்றார். எனக்கும் என
இழிவு சிறப்பும்மை வருவிக்கப்பட்டது.
(24)
25.
கருவை யம்பரன்,
அம்பர மேனியன்,
கடவுளர்
காணாத
உருவை அம்பிகை
பெறப்பகுந் தளித்தவன்,
ஒன்னலர்
புரம்நீற்று
பெருவை அம்பெனக்
கண்ணனை உடையன், என்
பிழைபொறுத்
தழியாத
திருவை அம்புவிச்
சிறப்பொடும் அளித்தவன்
திருக்களா
உடையோனே.
|