பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

59

ஆறாம்பத்து

முதற்சீரும் மூன்றாஞ்சீரும் ஐந்தாஞ்சீரும்
காய்ச்சீர்களாகவும் மற்றைய மாச்சீர்களாகவும் வந்த

எழுசீர் ஆசிரிய விருத்தம்.

51. காதற்பெ ருக்கும் ஒருகோடி கோடி
        கவலைப்பெ ருக்கும் மிகலாய்
    வாதைப்ப டுத்த அலைமாறு போல
        மனமாலு ழன்று விடவோ !
    வேதப்பெ ருக்கு முழவோசை விம்மு
        விழவிற்பெ ருக்கும் இயல்கூர்
    நாதப்பெ ருக்கும் ஒழியாது மல்கு
        கருவேச! ஞான உருவே.

    அளவில்லாத வேதங்களின் ஓசையும், வாச்சியத்தின் ஓசையும், எங்கும் பரவிய உற்சவங்களிலுள்ள ஆரவாரப் பெருக்கும், இலக்கணமமைந்த விணைமுதலிய வாச்சியங்களின் ஒலியும், நீங்காதுநிறைந்த திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! கடலலை ஒன்றன்பின்னொன்று மாறுபட்டு வருதல்போல, எனக்குள்ள ஆசைப் பெருக்கம் ஒரு கோடியும் கவலைப்பெருக்கம் ஒருகோடியும் ஆக மிகுந்து வாதை செய்ய எனது மனம் இம் மயக்கத்திற் சுழன்று அலையக்கடவேனோ? (தேவரீர் திருவுள்ளம் யானறியேன்.)

    மால்-மயக்கம். விழவு-விழா-உற்சவம். முழவு-ஒருவகை இசைக் கருவி. மல்குதல்-நிறைதல். காதல்-ஆசை.

    ஆசையாவது பற்று. பற்றின் வருவதே கவலையாதலால் ‘ காதற்பெ ருக்கு மொருகோடி கோடி, கவலைபெருக்கு மிகலாய் ’ என்றார். ‘ ஒருகோடி கோடி ’    என்பது மிகுதி குறித்தது. ஓசைகள் பலகூடிக் கலங்கினாற்போல பலதிறப்பட்ட காதலும் கவலையும்கூட என்மனம் கலங்குகிறதென்பார், வேதப்பெருக்கு முதலா