பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

61

53. மொழிகின்ற ஆறு சமயங்கள் தோறும்
        முழுதுஞ்சு ழன்று நிலையற்(று)
    அழிகின்ற சிந்தை அவலங்கெ டுத்துன்
        அடிகண்டு நாடி யறியும்
    விழியுங் கொடுத்த முகலிங்க நாத!
        மிகுமன்பர் தேடு பொருளே!
    பொழியுங் கடைக்கண் அருளால ளித்தி
        புரையற்ற முத்தி நிலையே.

    அறுவகையாகச் சொல்லப்படுகின்ற புறச்சமயங்களிலெல்லாம் முழுவதும்     சுழற்சியை யடைந்து நிற்கும் நிலை கெட்டு அழியாநின்ற மனத்திலுள்ள துன்பத்தை யொழித்ததேயன்றி உன் திருவடியைத் தேடியுணர்ந்து தரிசிக்க ஞானக்கண்ணை அடியேனுக்குக் கொடுத்தும் அருளிய முகலிங்க நாதனே ! முறுகிய அன்பினை யுடையோர் ஈட்டும் ஞானச்செல்வமே! குற்றமற்ற மோக்ஷ நிலையைத் திருக்கடைக்கண் சுரக்கும் அருளால் (எனக்குக்) கொடுத்தருளாய்.

    புறச்சமயங்க ளாறாவன-உலோகாயதம், சௌந்திராந்திகம், யோகாசாரம், மாத்தி மீகம், வைபாடிகம், ஆருகதம். அவலம்-துன்பம். புரை அற்ற-குற்றம் இல்லாத.

    கணப்பொழுதேனும் ஒரு நிலையில் நில்லாமல் எப்பொழுதும் கறங்குபோற்     சுழன்று திரிவது மனத்தின் இயற்கை. ஆதலின் பற்றுக்கோடொன்று இல்லாவிடத்து, அது நங்கூரமும் மீகாமனு மற்ற மரக்கலம்போல துறைதெரியாது ஓடித் தெறிகெட்டுப் போம். அவ்வாறு கெட்டொழியாமைப்பொருட்டு அம் மனத்தினை ஒரு நிலையிற் பிணித்துவைத்தல் இன்றியமையாது வேண்டப்படுவதாம். சுழலும் இயல்புடைய     மனத்தினுக்கு ஒரு பற்றுக் கோடாகும் அந் நிலையே சமயம் எனப்படும். ஆதலின், பற்றுக் கோடாம் எனக் கருதி யான் பற்றிய அப் பற்றுக்கோடெல்லாம்.