பக்கம் எண் :

80

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

பூண்டும், நீ என் மலக்குற்றத்தை ஒழிக்காமல், வாளா விருத்தலும் உனக்குப் புகழாகுமோ ?

    நள்ளிருள்-நடு இரவு.  இமயவல்லி-இமயமலையில் தோன்றிய கொடி     (போல்பவளாகிய உமாதேவி); கொடிபோல்வாளைக் கொடி என்றது உருவக அலங்காரம்.  துணைவன்-கேள்வன்-கணவன்.  போதம்-(சிவ) ஞானம்.  பொலன்கழல்-பொன்போலும் திருவடிகள்.  ஏதம்-குற்றம் ;  துன்பமெனினும் ஆம்.  இசை-புகழ்; இசையது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி.

    ஒரு கவிஞன் ஏவல் வழிநின்று ஒரு பெண்மகள்பால் தூது சென்றமையால் அவன் இறைமைக்குணம் பழுதுபடுமாறில்லை என்பதை முன்ன ரறிவிக்க வேண்டி, தூதுபோனதைக் குறிப்பிடுதற்கு முன்னே ‘நாதனே’ என்றார்.  நாதன்-இறைவன். அவ்வாறு தூதுசென்றது தன்னோடு பிரிவற நிற்கும் திருவருளின் பெருந்தகைமையால் என்பது தோன்ற தூதனென்றதை அடுத்து ‘இமயவல்லி துணைவனே’ என்றார்.  சுந்தரர் உன்னைப் பாடுதலொன்றே செய்தார் ; உன்னை ஒரு பெண்மகள் பால் தூதுசெல்ல ஏவினார்.  அவருக் கருள் செய்தனை நீ.  யானோ உன்னைத் துதிக்கின்றேன் ; உன் திருவடிக்குத் தொண்டுபூண்டொழுகுகின்றேன்; உன்னை ஏவிப் பணிகொள்வேனல்லேன் ; என் பாசத்தை அகற்றி என்னை ஆட்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.  எனக்கு அருள் செய்யாதிருப்பது நின் பெருந்தன்மைக்கு அழகாகுமோ என்பார்.  ‘இசையதாமோ’ என்றார்.

(70)

எட்டாம் பத்து

முதற் சீரும் மூன்றாஞ் சீரும் மாச்சீர்களாகவும்
மற்றைய இரண்டும் விளச்சீர்களாகவும் வந்த

கலிவிருத்தம்.

71. இசையுஞ் செல்வமுந் திருவு மின்பமும்
        அசைவி லாதபே ரறிவு முத்தியும்
    விசைய முந்தருங் கருவை மேவினோன்
        திசையு டுத்தவன் சீர்ப டிக்கவே.