த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
81 |
திருக்கருவையி லெழுந்தருளினவனும்
திக்கினை ஆடையாக உடுத்தவனும் (ஆகிய இறைவனது) புகழைப்பாட, (அப் பாடுதல்) செல்வத்தையும்
பொலிவையும் புகழையும் இன்பத்தையும் வெற்றியையும் கம்பித்தலில்லாத சிவஞானத்தையும் மோக்ஷத்தையும்
தரும்.
படிக்க என்னும்
வினையெச்சத்தினின்று பிரிந்த படித்தல் என்னுந் தொழிற்பெயர் வினைமுதலாய் நின்று தருமென்னும்
பயனிலை கொண்டது.
இசை-புகழ். திரு-அழகு.
விசையம்-வெற்றி.
இறைவன்
‘பொருள்சேர் புகழ்’ உடையனாதலால் அவன்சீர் படித்தலால் மெய்ப்புகழ் அடைவது திண்ணம், பூவோடு
சேர்ந்த நார் மணம் பெறுதல் திண்ணமாதல் போல. புகழுடையார் செல்வமடைதலும், செல்வமுடையார்
இன்பமடைதலும், இன்பமுடையார்க்கு அறிவு
கலக்க மற்றுத் தெளிந்து விளங்கலும் இயற்கை. அறிவானன்றி
முத்திப்பேறு கிட்டுதற்கில்லை; ‘ஞானமலது கதி கூடுமோ’ என்றார் பிறரும். முத்தியின் வருவதே வெற்றியுணர்ச்சி;
தன்னை அலைத்த பாசத்தை வேரறுத்த நிலையே முத்தியாதலின் : ‘உறுபிணியார் செறலழிந்திட் டோடிப்போனார்...இருநிலத்தில்
எமக்கெதிரா வாரு மில்லை’ என்று திரு நாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்தமையும் காண்க.
இங்ஙனம்,
இசைச் செல்வம் முதலியன ஒன்றற்கொன்று காரணமாய் நிற்றலால் காரணமாலையணி கொள்ளக்கிடக்கும்.
(71)
72.
படிய ளந்தவன்
பதும மேயவன்
அடிமு டித்தலம் அறியொ
ணாதவன்
கடிகொண் மாமலர்க்
களவி னீழலான்
குடியி ருக்கவென் நெஞ்சு
கோயிலே.
நிலவுலகை அளந்த
திருமாலாலும் தாமரை மலரில் வசிக்கும் பிரமனாலும் தனது திருவடித்தலமும் திருமுடித்
|