789 பரத்துவாசர் முதலானோர்க்கு ஸ்ரீராமர் ராட்சதர் மாண்டவகை கூறல் விருத்தம்-118 தரு-96 (மிகைப்பாடல்கள்-மீட்சிப்படலம்) பரிகலத் தமுதுஏந்தியே பந்திகள் தோறும் இரவி காதலற்கு அங்கதற்கு இலங்கையர் வேந்தற்கு உரிய வீரர்கட்களித்துத் தானவர்களோ பாதி வரிசையால் உண்ணமாமுனி விருந்தும் உண்டனரால் (சங்கிரகராமாயணம் 102-33 to 102-62 வரை உளது கண்டுகொள்க) குகன் ஸ்ரீராமர் வரவில்லை என்று வருந்துதல் விருத்தம்-119 திபதை-19 (மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம்) மான்நேர் விழியாளுடனே வனம்முன் போனான் ஒருநாள் வரும்நாள் இலதோ தேனே அமுதே தெளிவே தெளிவின் ஊனே உயிரே உலகாளுடையாய் 44-2 அம்பவளச் செவ்வாய் அனிகடகச் சேவகன் வம்பவிழும் சோலைக் கோசலை நாடுடைவள்ளல் எம்பெருமான் என்னை, இழிகுலத்து நாயேனைத் தம்பி எனஉரைத்த தரசரதி தோன்றானோ 44-3 வாழிமலைத் திண்டோள் சனகன்தன் மாமயிலை ஏழுலகும் ஆளும்இறைவன் மருமகளைத் தாழ்வில் பெருங்குணத்தாள் தான்உன் கொழுந்திநீ தோழன் எனஉரைத்த தோன்றலார் தோன்றாரோ 44-4 துங்க விற்கரத் தோளினார் சொன்னநாள் இங்கு வந்திலர் யானிறப்பேன் எனா மங்கை மாரும் படையும் வன்சுற்றமும் அங்குநீர்க் கங்கையின் அம்பியில் ஏற்றினான் 44-5 வேதநாதனும் வில்லியும் விரைமலர்த்திருவும் ஏதுசெய்யினும் என்னுயிர் முடிப்பென் எண்றெண்ணி |