790 ஓதநீரிடை ஓடம் உடைத்து உயிர்விடுவான் காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான் 44-6 கண்ணும் தோளும் வலம்துடிக்கும் கரை வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே எண்ணும் காலையிலே ஏழில்மாருதி அண்ணல் வந்தனன் என்றுரையாடினான் 44-7 பரதருக்கு ஸ்ரீராமர் காட்சி கொடுத்தல் விருத்தம்-120 தரு-97 அண்ணலே காண்டியால் அலர்ந்ததாமரைக் கண்ணனும் வானரக்கடலும் கற்புடைப் பெண்ணருங் கலமும் நின்பின் தோன்றிய வண்ண விற்குமரனும் வருகின்றார்களை ஊனுடை யாக்கைவிட்டு உண்மை வேண்டிய வானுடைத் தந்தையார் வரவு கண்டெனக் கானிடைப் போகிய கமலக் கண்ணனை தானுடை உயிரினைத் தம்பிநோக்கினான் காட்டினன் மாருதிகண்ணிற் கண்டஅத் தோட்டலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால் ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் கூட்டுருக் கண்டன்ன தன்மை கூடினான் ஆனதோர் அளவையின் அமரர் கோனொடும் வானவர் திருநகர் வருவதாம்என மேல்நிறை வானவர் வீசுப்பூவொடும் தானுயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால் தாயருக் கன்றுசார்ந்த கன்றெனும் தகையனானான் மாயையின் பிறந்தார்க்கெல்லாம் மனோலயம் வந்ததொத்தான் ஆய்இளையார்க்குக் கண்ணுள் ஆடிடும்பாவை யானான் ஓய்வுறுத் துலர்ந்தயாக்கைக்கு உயிர்புகுந்தனைய தொத்தான் (மீட்சிப்படலம் 104, 107, 110-112) |