முதலிய பல நூல்கள் கற்றுணர்ந்தவர் என்பதும், உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு பயின்று கவிபாடும் ஆற்றலுடையவர் என்பதும் கூறாமலே நன்கு விளங்கும். வெளிப் பொருள் ஒன்று, உட்பொருள் ஒன்று அமையப் பாடுவதே இவர் இயற்கைபோலும், நூலுட் காண்க. | பொருத்தம் | ஆசிரியர் நூலின் தொடக்கத்திற் "கார்கொண்ட" என்ற சீர் எடுத்திருப்பது பாட்டுடைத்தலைவர் ஆகிய "அழகர்" என்ற பெயருக்குப் பொருத்தம் பார்த்து வைத்ததாகத் தோன்றுகிறது. மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம் என்ற பத்தும் பொருந்தியுள்ளது அச்சீரின்கண். பாட்டியல் கற்றவர் என்பதில் ஐயமுளதோ? ஆய்ந்தறிக. | பொருளணி | "துரி சற்றோர், இன்சொல்லைக் கற்பா ரெவர்சொல்லும் நீ கற்பாய் உன்சொல்லைக் கற்கவல்லா ருண்டோகாண்" | (16, 17) | "வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில் லாளனைநீ கண்டா லகன்றிடுவாய்" | என்று கிளியின் இயற்கைப் பண்பிணை எடுத்துரைக்குமிடங்கள் தன்மையணி யமைந்துள்ளன. அழகர் தெய்வப் பண்பினைச் செப்புமிடங்களிலும் அவ்வணி சேர்ந்துள்ளன. "இந்திரன் போலு மிடபாசலம் அவன்மேல் வந்தவிழி போலும் வளச்சுனைகள் - முந்துதிரு மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம் போலவரு நூபுரநதி யான்" | (102, 103) | எனவும், "இயலுங் கரியுமதி லெற்று முரசும் புயலு முருமேறும் போல" | (155) | எனவும் உவமையணி அமைந்துள்ளன. | | |
|
|