"உண்ணின் றுருக்கும் ....... அத்துவிதா னந்தமென்ற களி யானையினான்" | (112 - 116) | "தானந் தவர்க்கத் துடனெழுந்து......வேதப்புரவியான்" | (116 - 119) | எனவும் அத்துவிதானந்தத்தை யானையாகவும், வேதத்தைப் புரவியாகவும் உருவகஞ் செய்திருப்பது காண்க.
"வன்போரில், மேவுஞ் சிவன்விழியால் வேள்கருகி நாண்கருகி கூவும் பெரிய குயில்கருகிப் - பாவம்போல் நின்று மறுப்படுநாள் நீதா னடுப்படையிற் சென்று மறுப்படா தேவந்தாய்" | (39 - 41) | எனவும்,
"பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதியென் பாரென்றோ மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்" | (3) | "கைச்சிலைவே ளால்வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ பச்சிலை ரூபம் படைத்திருந்தாய்" ; | (49) | எனவும் கற்பனை வந்துள்ள இடங்கள் காண்க. இன்னும் பல இடங்களில் இவ்வணிகள் வந்துள்ள பகுதிகளும் பிற வணிகள் வந்துள்ள பகுதிகளும் ஆய்ந்து காண்க. |