"பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா ஆரமுது கடைந்த வங்கையான் - நாரியுடன் வன்கான கங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு மென்கான கங்கடந்த வீட்டினான்" | (73, 74) | "அரணாம் புயங்க ளுறுமம்ப ரீடற்கும் சரணாம் புயங்க டருவோன்" | (138) | எனவும் யமகம், திரிபு என்ற சொல்லணிகள் வந்துள்ளன. "தம்பியர் மூவருக்கும் தானே யரசீந்த, நம்பி" (216) எனவும், "கும்பமுனி வாயி னுரையடங்க வந்த கடல" (132, 133) எனவும், அரவணையானென்பது முண்டண்ணலரன்போல, இரவணையானென்பது முண்டு (170) எனவும், "மேவுஞ் சிவன் விழியால் வேள்கருகி நாண்கருகி" (40) எனவும் புராணக்கதைகள் புகுந்திருக்கும் இடங்களை நோக்குக. பால் குடிக்கும் பச்சைக் குழந்தை (48) கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும் (46, 47), அவனசையாமல் அணுவசையாது (1-3), இபமுண்ட வெள்ளிற்கனி (187, 188) (யானையுண்ட விளங்கனி) யானேன் எனப் பழமொழிகள் சில பார்க்கின்றோம். நம்மாழ்வார் காப்பு முன் அமைத்திருப்பதும், கருடனைப் பெரிய திருவடிகள் (23) என்றும், அழகர் வாகனம் ஆகிய குதிரையைக் "குதிரை நம்பிரான்" (152) என்றும், பள்ளியறையைச் "சேர்த்தி" (230) என்றும் இவர் செய்யுளில் அமைத்துப் பாடியதும் வைணவமத மரபு குறித்தவையே. புதுமனை புகுவோரும், பகைவர் நாட்டை வென்று தனக்குரியதாக்கிப் புதிதாக அந்நாட்டில் நகரிற் புகுவோரும், அவற்றைப் புதுக்கி மாவிலை தோரணங்கட்டி, வாழை கமுகு நாட்டிப் புகுவது தமிழ்நாட்டு வழக்கமாகும். அது குறித்து, "வீடணன் போய்த் தொல்லிலங்கை கட்டு புதுத் தோரணமோ?" என்று நாட்டு வழக்கத்தை நாட்டினர். ஒருவர்பால் ஒருவரைத் தூது விடுப்போர், தூது சொல்லும் ஆற்றல் உடையவரென வறிந்து அவரைப் பெரிதும் புகழ்ந்து வேண்டும் உதவி புரிகின்றேன் என்று |